கடந்த 2007 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தை அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி தொடங்கி வைத்தார். அதன்படி தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வாரியத்தை சீரமைப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி முதலமைச்சர் தலைவராகவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் துணைத்தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நிதித்துறை முதன்மைச் செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் ஆகியோர் வாரியத்தின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சாரா நிறுவனம் மற்றும் சங்கப்பிரதிநிதிகளையும் உறுப்பினர்களாக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. முதன்முறையாக தனியார் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பங்களிப்பின்றி அமைக்கப்பட்டுள்ள நலவாரியத்திற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் வரவேற்றுள்ளனர்.
இதையும் படிங்க : மீட்புப்பணிக்காக போரை நிறுத்திய ரஷ்யா