இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தென்மேற்கு கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால், கேரளாவில் நாளை முதல் தென்மேற்கு பருவமழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம், சுரளக்கோடு, சிவலோகம் பகுதியில் 1 செ.மீ மழை பெய்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வெப்பநிலை பொறுத்தவரையில் 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்ககூடும். சென்னையை பொறுத்தவரை மழைக்கு வாய்ப்பில்லை. ஆனால் வெப்பம் படிப்படியாக குறையும்" என்றார்.
'கேரளாவில் நாளை தொடங்குகிறது பருவமழை' - வானிலை ஆய்வு மையம் - Weather report
சென்னை: "தென்மேற்கு கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால் கேரளாவில் நாளைமுதல் தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும்" என்று, சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.