ETV Bharat / state

3ஆவது முறையும் ஆட்சி அமைப்போம்: ஈபிஎஸ்-ஓபிஎஸ் உறுதி ஏற்பு - chennai merina beach

சென்னை: தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றிபெற்று 2021ஆம் ஆண்டில் ஆட்சி அமைப்போம் என்று எம்ஜிஆர் நினைவுநாளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

மூன்றாவது முறையும் ஆட்சி அமைப்போம்- ஈபிஎஸ்-ஓபிஎஸ் உறுதி ஏற்பு
அதிமுக மூன்றாவது முறையும் ஆட்சி அமைப்போம்- ஈபிஎஸ்-ஓபிஎஸ் உறுதி ஏற்பு
author img

By

Published : Dec 24, 2020, 1:26 PM IST

அதிமுகவின் நிறுவனத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 33ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆரின் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, அனைவரும் எம்ஜிஆர் நினைவுநாள் உறுதிமொழி ஏற்றனர். அந்த உறுதிமொழியில், "அதிமுக ஏழைகளைக் காக்கின்ற இரும்புக் கோட்டை. இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தை, நமக்குத் தந்த எம்ஜிஆரின் புகழை எந்நாளும் காப்போம்.

எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்
எம்ஜிஆரின் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

பெரியாரின் மறுமலர்ச்சிக் கொள்கைகளை மனத்திலே சுமந்து, அண்ணாவின் லட்சியக் கனவுகளை நனவாக்க, நல்லாட்சி நடத்தி, மக்களுக்கு மகிழ்ச்சி தந்தார்

தமிழ்நாட்டில் ஒரு குடும்ப ஆட்சி இருக்கக் கூடாது என்று, ஜனநாயகம் காப்பாற்றப்பட, புதிய எழுச்சி தந்தவர். எம்ஜிஆர் உருவாக்கிய உண்மையான ஜனநாயகத்தைக் காப்போம்.

2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், மகத்தான வெற்றிபெற்று, மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையை, நிகழ்த்திக் காட்டுவோம் வீர சபதம் ஏற்கிறோம். சரித்திரம் படைப்போம் என்று உளமார உறுதி ஏற்கிறோம்" உள்ளிட்ட 14 உறுதிமொழிகளை ஏற்றனர்.

இதையும் படிங்க: ஆதரவாளர்கள் விரும்பினால் கட்சித் தொடங்குவேன் - மு.க. அழகிரி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.