ETV Bharat / state

பேரறிவாளனை மீண்டும் கைது செய்து உள்ளே தள்ளும் வரை போராடுவோம் - காங்கிரஸ் மாநில  துணைத் தலைவர் - Perarivalan release

பேரறிவாளனை மீண்டும் கைது செய்து உள்ளே தள்ளும் வரை போராடுவோம் என காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் பொன். கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பேரறிவாளனை மீண்டும் கைது செய்து உள்ளே தள்ளும் வரை போராடுவோம் - காங்கிரஸ் துணைத் தலைவர்

author img

By

Published : May 19, 2022, 5:35 PM IST

சென்னை: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாவட்டத் தலைவர் சிவராஜ் தலைமையில் வெள்ளை துணியால் வாயைக் கட்டிக் கொண்டு காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின்போது செய்தியாளர்களைச் சந்தித்த பொன். கிருஷ்ணமூர்த்தி ( மாநில துணைத் தலைவர்), "நேற்று மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரி விடுத்த அறிக்கையின் அடிப்படையில் இன்று இந்த அறப்போராட்டம் நடைபெறுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்காவிட்டாலும் அதன் மீது கருத்துச் சொல்ல இந்திய குடிமக்கள் அனைவருக்கும் உரிமை உண்டு.

நேற்று விடுதலை செய்யப்பட்டவர் தியாகி அல்ல. அவர் ஒரு பயங்கரவாதி. கொலைக் குற்றவாளிகளை தமிழர்கள் என்று அடையாளம்காட்டி, அவர்களை விடுதலை செய்வது அபத்தமான ஒன்று.

திமுகவுக்கு பகிரங்க கேள்வி: இந்த பயங்கரவாதியை கொஞ்சுவதும் கட்டிப் பிடிப்பதையும் வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காங்கிரஸ் கட்சியினரும் கொந்தளித்து உள்ளோம். அவர்களுக்கு பதில் சொல்ல முடியாத அளவிற்கு இருக்கிறோம். ஆனால், எங்கள் தலைவர் கே.எஸ். அழகிரியின் அறிக்கை சற்று ஆறுதலாக உள்ளது.

ஜனநாயகத்திற்கு நேற்று ஒரு கறுப்பு நாள். மக்கள் யாரும் இந்த விடுதலையை கொண்டாடவில்லை. இதை ஆதரிக்கும் கழகத்திடம் கேட்கிறேன். உங்கள் குடும்பத்தில் உங்கள் கழகத்தில் யாராவது இறந்தால் இப்படி கொண்டாடுவீர்களா. எனவே, பேரறிவாளனை மீண்டும் கைது செய்து உள்ளே தள்ளும் வரை போராடுவோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருச்சி: சிக்கலில் முடிந்த காங்கிரஸ் போராட்டம்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.