சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் க.பாண்டியராஜன் களப் பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைத்தே ஆகவேண்டும், அவர்களை விடக்கூடாது என்ற நடிகர் ரஜினிகாந்த்தின் வேண்டுகோளை ஏற்கிறோம். நிச்சயமாக குற்றவாளிகளை விடமாட்டோம். சட்டத்தின்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை முழுமையாக தமிழ்நாடு அரசு எடுத்துவருகிறது.
நீதிமன்றத்தின் அறிவுரைப்படி தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. குற்றவாளி யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்தில் நாங்கள் உடன்படுகிறோம்.
கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களையும் கணக்கில் சேர்த்து, மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவு உள்ளதுபோல் திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து கூறிவருவது நியாயமற்றது” என்றார்.
இதையும் படிங்க:'சத்தியமா விடவே கூடாது' - சாத்தான்குளத்துக்கு ட்வீட் மூலமாக நீதி கேட்கும் ரஜினிகாந்த்!