ETV Bharat / state

சாக்கடையை சுத்தம் செய்த வாட்ஸ்அப் குழு, இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு - ennore

சென்னை: எண்ணூர் பகுதியில் வசிக்கும் இளைஞர்கள், வாட்ஸ்அப் குழுவினர், ஊர் நிர்வாகிகள் ஒன்றிணைந்து கால்வாயை சுத்தம் செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

cleaned the sewer
author img

By

Published : Aug 23, 2019, 7:39 AM IST

சென்னை எண்ணூர் சத்தியவாணிமுத்து நகரில் சுமார் 18 தெருக்கள் உள்ளன. இந்தப் பகுதியில் சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர். இங்கு இதுவரை மாநகராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்தது கிடையாது என்றும் கால்வாயில் குப்பைகள், மணல்கள் படிந்து கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருவதாகவும் அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

திறந்த நிலையில் கால்வாய்களை அடைக்கவோ மாற்று ஏற்பாடு செய்யவோ மாநகராட்சி நிர்வாகம் தயாராகவில்லை என்றும் கூறுகின்றனர்.

இதையடுத்து அந்தப் பகுதியில் வசிக்கும் இளைஞர்கள், வாட்ஸ்அப் குழுவில் உள்ள ஊர் நிர்வாகிகள் ஒன்றிணைந்து மாநகராட்சிக்கு புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் கழிவுநீர் அகற்ற ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாகக் கூறி கால்வாய் சுத்தம் செய்யும் பணிக்கு ஏற்பாடு செய்ய மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அங்குள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து தங்களது சொந்த செலவில் மண்வெட்டி, பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கழிவுநீர் கால்வாயில் இறங்கி கால்வாயில் உள்ள குப்பைக்கழிவுகளை சுத்தம் செய்தனர். யாரையும் எதிர்பார்க்காமல் இளைஞர்கள் முன்வந்து கால்வாயில் இறங்கி சுத்திகரிப்புப் பணி மேற்கொண்டதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இது பற்றி பேசிய அந்த இளைஞர்கள், சென்னை மாநகராட்சி சார்பில் குப்பைகள், கழிவுநீர் அகற்ற புதிய வாகனங்கள் வாங்கியும் அவற்றை பயன்படுத்தாமல் மாநகராட்சி வளாகத்துக்குள்ளேயே வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டினர். கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் கழிவுநீர் தேங்கி பல நோய்த் தொற்றுகள் பரவக்காரணமாக அமைந்துள்ளதாகவும், சுகாதாரச் சீர்கேட்டால் டெங்கு, மலேரியா நோய்த் தொற்றுகளால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர்.

சாக்கடையை சுத்தம் செய்து எடுத்துக்காட்டாக மாறிய இளைஞர்கள்

மழைக்காலம் வருவதற்கு முன்பு இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படாமலிருக்க இளைஞர்கள் தாங்களே முன்வந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர். 'மாற்றத்தை உன்னில் இருந்து தொடங்கு' என்ற வரிகளுக்கு ஏற்ப துணிந்து செயல்பட்ட இந்த இளைஞர்களின் செயல் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.

Intro:சென்னை எண்ணூர் சத்தியவாணிமுத்து நகர் பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் வாட்ஸப் குழுவினர் ஊர் நிர்வாகிகள் ஒன்றிணைந்து வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் இறங்கி கால்வாயை சுத்தம் செய்தனர்Body:

சென்னை எண்ணூர் சத்தியவாணிமுத்து நகரில் சுமார் 18 தெருக்கள் உள்ளது இந்த பகுதியில் சுமார் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் இதுவரை மாநகராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்தது கிடையாது என்றும் கால்வாயில் குப்பைகள் மணல்கள் படிந்து கால்வாயில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வந்தநிலையில் திறந்த நிளையில் கால்வாய் இருப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் இதணை கண்டுக்கொல்ல வில்லைஎன்றும்

இதனால் அந்த பகுதியில் வசிக்கும் இளைஞர்கள்மற்றும் வாட்ஸ்அப் குழுவின் ஊர் நிர்வாகிகள் ஒன்றிணைந்து மாநகராட்சிக்கு புகார் அளித்ததில் மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் அகற்ற ஆட்கள் பற்றாக்குறையாக இருப்பதால் கால்வாய் சுத்தம் செய்ய முடியாது என்று மறுத்த நிலையில்

இளைஞர்கள் ஒன்றிணைந்து தங்களது சொந்தப் பணத்தில் மண்வெட்டி பிளீச்சிங் பவுடர் ஆகிய பொருட்களை வாங்கி கழிவுநீர் கால்வாயில் இறங்கி கால்வாயில் உள்ள குப்பைக்கழிவுகளை சுத்தம் செய்தனர் இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுப்படும் இளைஞர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பைகள் மற்றும் கழிவுநீர் களை அகற்ற புது புது வாகனங்கள் வாங்கி பயன்படுத்தாமல் மாநகராட்சி வளாகத்துக்குள்ளேயே வைத்திருப்பதாகவும் இது போன்ற கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடாத நிலையில் கால்வாயில் குப்பைகள் சேர்ந்து கழிவுநீர் தேங்கி பல நோய்த்தொற்றுகள் வருவதாகவும் கடந்த ஆண்டு இதுபோன்ற தங்கள் பகுதியில் டெங்கு மற்றும் மலேரியா நோய்த் தொற்றுகளால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த நிலையில். மழைக்காலம் வருவதர்க்கு முன்பே இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் நடக்காமல் இருக்க இளைஞர்கள் தாங்களே முன்வந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்Conclusion:சென்னை எண்ணூர் சத்தியவாணிமுத்து நகர் பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் வாட்ஸப் குழுவினர் ஊர் நிர்வாகிகள் ஒன்றிணைந்து வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் இறங்கி கால்வாயை சுத்தம் செய்தனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.