ETV Bharat / state

மெட்ரோ பணி காரணமாக சென்னையில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்! - Water

chennai metro rail: மெட்ரோ பணி காரணமாக சென்னையில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி குடிநீர் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Water supply
குடிநீர் வாரியம்
author img

By

Published : Aug 15, 2023, 2:54 PM IST

சென்னை: சென்னையின் முக்கிய பகுதிகளில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பல இடங்களில், சுரங்கம் தோண்டும் பணிகளும், மெட்ரோ ரயில் உயர்மட்ட பாதைக்கான தூண்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனால், சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு நாளை (ஆகஸ்ட் 16ஆம் தேதி) மற்றும் நாளைமறுநாள் குடிநீர் விநியோகம் இருக்காது என குடிநீர் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டன. அதில் முதலாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கி மலை வரையும், மேலும் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை பயன்பாட்டில் உள்ளது. அதைத் தொடர்து சென்னையில் தற்போது, 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாதவரம் முதல் சிறுசேரி வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும், தற்போது 45க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்டபாதை, சுரங்கப்பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சென்னை மாநகரில் உள்ள முக்கிய பகுதிகளில், 43 இடங்களில் சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனால், சென்னையின் முக்கிய மண்டலங்களான வளசரவாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் 2 நாட்களுக்கு குழாய் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீா் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இது குறித்து குடிநீர் வாரியம் அளித்த விளக்கம் "சென்னை, கோயம்பேடு காளியம்மன் கோயில் தெருவில் 900 மி.மீ விட்டமுடைய குடிநீா் குழாய் இணைப்பு பணிகள், ஐயப்பன் நகா் 1 ஆவது தெரு சந்திப்பு முதல் சாய் நகா் இணைப்பு சாலை வரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட இருப்பதால், புதன்கிழமை (நாளை ஆகஸ்ட் 16) இரவு 7 மணி முதல் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 17) இரவு 7 மணி வரை அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய 4 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தண்ணீர் விநியோம் நிறுத்தும் பகுதிகள்: எம்.எம்.டி.ஏ. காலனி, அமைந்தகரை, அரும்பாக்கம், சூளைமேடு, தியாகராயநகா், தேனாம்பேட்டை, கோயம்பேடு, விருகம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி, கே.கே.நகா், அசோக் நகா், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், சி.ஐ.டி. நகா், தாய்சா அடுக்குமாடி வளாகம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தங்களுக்கு வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக்கொள்ள வாரியத்தின் இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீா் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்" என குடிநீர் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: ‘அடுத்த ஆண்டு சுதந்திர தினத்திலும் உரையாற்றுவேன்’ - நாடாளுமன்றத் தேர்தலுக்கு தொடக்கப்புள்ளி வைத்து பிரதமர் உரை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.