ETV Bharat / state

'பத்மநாபபுரம் கூட்டுகுடிநீர் திட்டம் நிறைவுபெறும்' - வேலுமணி உறுதி

சென்னை: "பத்மநாபபுரம் கூட்டுகுடிநீர் திட்டம் இந்தாண்டுக்குள் முடிக்கப்படும்" என்று, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேரவையில் தெரிவித்தார்.

வேலுமணி
author img

By

Published : Jul 2, 2019, 8:38 PM IST

சென்னை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ராஜன், தனது தொகுதியில் சரியாக குடிநீர் வழங்கப்படுவதில்லை என குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி, "நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகர்கோவில் நகராட்சி பகுதிகளில் மொத்தமுள்ள 52 வார்டுகளில் 6 வார்டுகளுக்கு தினசரியும், 7 வார்டுகளுக்கு 3 நாளுக்கு ஒருமுறையும், மீதமுள்ள 39 வார்டுகளில் 5 நாட்களுக்கு ஒருமுறை நபர் ஒருவருக்கு 93 லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது" என்று தெரிவித்தார்.

மேலும், "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 32 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.2.80 கோடி செலவிலும், 10 அங்கன்வாடி மையங்களுக்கான குடிநீர்த் திட்டங்கள் 3 லட்சம் ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இரணியல் பேரூராட்சியில் 319 ஊரகக் குடியிருப்புகள் பயன் பெற, சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய கூட்டுக் குடிநீர் திட்டம், ரூ.2.79 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட உள்ளன. இத்திட்டத்தின் இதர பயனாளிகளான பேரூராட்சிகள், ஊரக குடியிருப்புகளுக்கும் நபார்டு வங்கி மூலம் ரூ.99.22 கோடிக்கு கடனுதவி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது" என்று விளக்கமளித்தார்.

Intro: பத்மாநாபபுரம் கூட்டுகுடிநீர் திட்டம் 2019ல் முடிக்கப்படும்
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேரவையில் தகவல் Body: பத்மாநாபபுரம் கூட்டுகுடிநீர் திட்டம் 2019ல் முடிக்கப்படும்
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேரவையில் தகவல்

சென்னை,
தமிழக சட்டமன்ற பேரவையில் இன்று விவாதத்தின் போது நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ராஜன் தனது தொகுதியில் சரியாக குடிநீர் வழங்கப்படுவதில்லை என குற்றஞ்சாட்டினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் வேலுமணி , நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகர்கோவில் நகராட்சி பகுதிகளில் மொத்தமுள்ள 52 வார்டுகளில் 6 வார்டுகளுக்கு தினசரியும், 7 வார்டுகளுக்கு 3 நாளுக்கு ஒருமுறையும், மீதமுள்ள 39 வார்டுகளில் 5 நாட்களுக்கு ஒருமுறையும் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 93 லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கணபதிபுரம் பேரூராட்சியில் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 70 லிட்டர் மற்றும் அதற்கு அதிகமாக குடிநீர் வழங்கப்படுகிறது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 32 ஊரக குடியிருப்புகளுக்கு 2 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவிலும், 10 அங்கன்வாடி மையங்களுக்கான குடிநீர்த் திட்டங்கள் 3 லட்சம் ரூபாய் செலவிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
குழித்துறை ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் இரணியல் பேரூராட்சி மற்றும் 319 ஊரகக் குடியிருப்புகள் பயன் பெறவும், ஏற்கனவே பயனில் உள்ள பத்மநாபபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் காட்டாத்துறை கூட்டுக் குடிநீர் திட்டங்களை மேம்படுத்தவும், பொது சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய கூட்டுக் குடிநீர் திட்டம், 2 லட்சத்து 79 ஆயிரம் மக்கள் பயன்பெறும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் இதர பயனாளிகளான பேரூராட்சிகள் மற்றும் ஊரக குடியிருப்புகளுக்கும் நபார்டு வங்கி மூலம் ரூ.99.22 கோடிக்கு கடனுதவி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையான ரூ.59.91 கோடிக்கு குறைந்தபட்ச தேவை திட்டத்தின் கீழ் மாநில அரசின் நிதி ஆதார ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு பரிசீலினையில் உள்ளது . இப்பணி 2019 இறுதியில் நிறைவு பெறும். இந்த தொகுதியில் ராஜக்கமங்களம் ஊராட்சி ஒன்றியத்தில் 87 குடியிருப்புகள் பயன்பெற உள்ளன என தெரிவித்தார்.

Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.