சென்னை: ஆர்கே நகர் வைத்தியநாதன் மேம்பாலம் அருகே வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சிவபிரசாத் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேம்பாலத்தின்கீழ் பகுதியில் காவல்துறையினர் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படியாக இருந்த இளைஞரை விசாரணைக்காக அழைத்தனர். காவல்துறையிரைப் பார்த்த உடன் அந்த இளைஞர் தப்பி ஓட முயன்றார்.
அவரை போலீசார் துரத்தியபோது ரயில்வே தண்டவாளத்தில் தவறிவிழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டது. அவரைப் பிடித்த காவல்துறையினர். சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
22 வழக்குகள்
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், புதுவண்ணாரப்பேட்டை திருவள்ளுவர் குடியிருப்பில் வசித்து வரும் விச்சு என்கிற சைலேஷ்குமார் (22) என்பது தெரிய வந்தது.
இவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், வழிப்பறி என 22 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் ராயபுரத்தில் உள்ள அரசியல் பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல், பட்டம் தயாரித்து விற்பனை: தந்தை-மகன் கைது