ETV Bharat / state

வக்ஃபு வாரியம் சொத்து முறைகேடு வழக்கு: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான சொத்துக்களை முறைகேடாக விற்பனை செய்ய உடந்தையாக இருந்த அலுவலர்களிடம் உரிய விசாரணை நடத்தக் கோரிய மனு மீது ஆறு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க தமிழநாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Aug 17, 2021, 7:41 AM IST

சென்னை: வக்ஃபு வாரிய பாதுகாப்புக்குழு அறக்கட்டளை அமைப்பின் தலைவரான மதுரை கட்ராபாளையம் தெருவைச் சேர்ந்த எம்.அஜ்மல்கான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அம்மனுவில், "தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் அன்வர்தீன், வாரியத்தின் முன்னாள் தலைமை செயல் அலுவலரும், தற்போதைய ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் முகமது அஸ்லம், ஓய்வு பெற்ற முதன்மை செயல் அலுவலர் ரசீத் அலி, வக்ஃபு வாரிய கண்காணிப்பாளர் லியாகத் அலி, ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் நூருல்லா, இளநிலை உதவியாளர் முகமது ஆலிம் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் வக்ஃபு வாரிய உறுப்பினர்கள், இதர ஊழியர்களுடன் கூட்டு சேர்ந்து 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வக்ஃபு வாரிய சொத்துக்களுக்கு ஆட்சேபனையில்லா சான்றிதழ் வழங்கி தனிநபர்களுக்கு விற்பனை செய்ய உடந்தையாக செயல்பட்டுள்ளனர்.

எந்த நடவடிக்கையும் இல்லை

இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, வக்ஃப்பு வாரிய சொத்துக்களை மீட்கக்கோரி தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின நலத்துறை முதன்மை செயலாளர், தற்போதுள்ள வக்ஃபு வாரிய தலைமை செயல் அலுவலர், லஞ்ச ஒழிப்பு காவல்துறை ஆகியவற்றில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வக்ஃபு வாரிய சொத்துக்களை முறைகேடாக தனிநபர்களுக்கு விற்பனை செய்ய உடந்தையாக இருந்த அலுவலர்கள், ஊழியர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், மனுதாரரின் கோரிக்கை மனு மீது ஆறு வாரங்களுக்குள் விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: மத்தியப் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.