சென்னை: அரசு சார்ந்த நிகழ்வுகளின் செய்திகள் தொடர்பாக ஊடகங்களுக்கு தகவல் தெரிவிப்பது, செய்தி குறிப்புகள் வெளியீடுவது என அரசு சார்ந்த செய்திகள் மற்றும் தகவல்களை வழங்கும் பணியை மக்கள் தொடர்பு அதிகாரிகள், அலுவலர்கள் மேற்கொள்கின்றனர்.
அவர்கள் தகவல்களை பறிமாறிக்கொள்ள செல்போன்களை பயன்படுத்தி வந்தனர். சில நேரங்களில் செல்போன் சிக்னல் கிடைக்காமல் போவதால் மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்குள் தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. அவர்கள் தொடர்புகொள்ள இடையூறு இல்லாமல் சிக்னல் கிடைக்க வேண்டும் என்று தற்போது மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தொடர்பு கொள்வதில் எவ்வித தாமதமும் இல்லாமல் தகவல் பரிமாறுவதற்கு உதவும் என்று செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. காவல் துறையினர், தனியார் செக்யூரிட்டி அலுவலர்கள் வாக்கி டாக்கி பயன்படுத்துவது வழக்கம். ஆனால், முதல் முறையாக மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘ஓபிஎஸ் கட்சியிலேயே இல்லை, அவர் எப்படி அதிமுக வரிசையில் உட்கார முடியும்’ - ஜெயக்குமார்