ETV Bharat / state

வக்ஃப் வாரிய உறுப்பினர் தேர்தல் அட்டவணை வெளியீடு - latest chennai news

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது.

wagb-board-election-date-announced
வக்ஃப் வாரிய தேர்தல் அட்டவணை வெளியீடு
author img

By

Published : Aug 11, 2021, 6:31 PM IST

சென்னை: தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர் தேர்தலுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 16ஆம் தேதியாகும்.

வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசிநாள், ஆகஸ்ட் 19ஆம் தேதி, வேட்பாளர் இறுதிப்பட்டியல் ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியிடப்படுகிறது. தேர்தல் அவசியமானால், 26ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் 27ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் அரசு முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக முன்னாள் எம்.பி. அப்துல்ரகுமான் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர் தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.