இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் 38 தொகுதிகளிலும், 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலும் இன்று காலைத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 13.48 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது அனைத்து மாவட்டங்களிலும் எத்தனை விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது என்ற தகவலை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு வெளியிட்டார். அதில் அதிகபட்சமாக ஆரணி தொகுதியில் 36.51 விழுக்காடு வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 22.8 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன.
பகல் 11 மணி நிலவரப்படி 38 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளின் நிலவரம்:
தென் சென்னை : 23.87%
மத்திய சென்னை: 22.89%
வடசென்னை : 23.36%
திருவள்ளூர் : 31.00%
ஸ்ரீபெரும்புதூர் : 26.24%
காஞ்சிபுரம் : 29.37%
அரக்கோணம் : 33.07%
கிருஷ்ணகிரி : 31.65%
தருமபுரி : 31.47%
திருவண்ணாமலை : 32.06%
ஆரணி : 36.51%
விழுப்புரம் : 34.83%
கள்ளக்குறிச்சி :32.93%
சேலம் : 31.46%
நாமக்கல் : 32.94%
ஈரோடு : 30.72%
திருப்பூர் : 28.14%
நீலகிரி : 28.32%
கோவை : 27.61%
பொள்ளாச்சி : 29.80%
திண்டுக்கல் : 28.65%
கரூர் : 34.65%
திருச்சி : 31.67%
பெரம்பலூர் : 32.77%
கடலூர் : 28.56%
சிதம்பரம் : 31.79%
மயிலாடுதுறை : 33.36%
நாகப்பட்டினம் : 31.20%
தஞ்சாவூர் : 30.76%
சிவகங்கை : 30.55%
மதுரை : 25.41%
தேனி : 31.17%
விருதுநகர் : 29.25%
ராமநாதபுரம் : 29.48%
தூத்துக்குடி : 28.46%
தென்காசி : 29.72%
திருநெல்வேலி : 25.96%
கன்னியாகுமரி : 26.31%
ஆகிய வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். மேலும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 22.37 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி 1 மணி நேரம் நிலவரம் 43.5 விழுக்காடு பதிவாகியுள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.