ETV Bharat / state

வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை பரிசோதனை நிறைவு- சத்யபிரதா சாகு - tamilnadu election commission

சென்னை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை பரிசோதனை ஆய்வு 7 மாவட்டங்களில் முடிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு
மின்னணு வாக்குப்பதிவு
author img

By

Published : Jan 5, 2021, 4:19 PM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி தேர்தலுக்கான பணிகளில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கும் அனைவருக்கும் ஒப்புகைச் சீட்டு வழங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முன்னேற்பாட்டின் ஒரு பகுதியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்கனவே பதிவான பதிவுகளை அலுவலர்கள் முன்பு நீக்கும் பணிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் அரியலூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை பரிசோதனை ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 மாவட்டங்களில் பணிகள் நடந்து வருகிறது என தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் அதிகளவில் ஒன்று கூடுவதை தடுக்க ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஆயிரம் பேர் மட்டும் வாக்களிக்கும்படி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மாநிலம் முழுவதும் 65,000 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில் தற்போது அதனை 95,000 வாக்குச்சாவடிகளாக உயர்த்தி அதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுவருகிறது. வாக்குப்பதிவு மின்னணு இயந்திரம் வைப்பதற்காக மேலும் 31 சேமிப்பு கிடங்குகள் மார்ச் இறுதிக்குள் தயாராகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மார்ச் இறுதிக்குள் 31 வாக்குபதிவு இயந்திரங்கள் சேமிப்பு கிடங்குகள் தயார்: தலைமை தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சாகு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.