சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் அடையாள அட்டை சேர்க்கை, திருத்தம் தொடர்பாக இரண்டு நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் 7 லட்சத்து 10 ஆயிரத்து 274 பேர் விண்ணப்பித்துள்ளனர் என தமிழ்நாடு தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதில் புதிதாக வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை சுமார் 4,44,019 பேரும், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கு சுமார் 57,943 பேரும், வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் திருத்தம் தொடர்பாக 77,698 பேரும், இடமாற்றத்திற்காக 1,30,614 பேரும் என மொத்தமாக 7,10,274 பேர் விண்ணப்பித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:குஜராத் தேர்தல் - 5ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்