சென்னை: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாள் விழா இன்று (செப்.5) கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள வ.உ.சிதம்பரனார் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் கட்சி சார்பில் தங்கபாலு, செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், புதியநீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், நடிகர் ஆனந்தராஜ் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வ.உ.சியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கருணாநிதி வழியில் ஸ்டாலின்
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, "முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வழியில், ஸ்டாலினும் வ.உ.சிக்கு புகழ் சேர்க்கிறார். சுதந்திரத்திற்காக மட்டுமின்றி தொழிலாளர்களுக்காவும் வ.உ.சி பாடுபட்டார். அவரின் தியாகம் என்றும் வீண் போகாது, அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்" என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வ.உ.சி உருவப்படத்திற்கு மரியாதை செய்த முதலமைச்சர்