ETV Bharat / state

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் விவகாரம்! இறுதி கட்ட வாதம் நிறைவு! டிச.4ல் தீர்ப்பு - உயர்நீதிமன்றம்! - சென்னை செய்திகள்

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பை டிசம்பர் 4ஆம் தேதி வெளியிடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

chennai high court
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 3:24 PM IST

சென்னை : அதிமுக பொது செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்த பிறகு, அவரது தோழியான வி.கே.சசிகலாவை இடைக்கால பொது செயலாளராகவும், டிடிவி.தினகரனை துணை பொது செயலாளராகவும் அதிமுக-வினர் தேர்ந்தெடுத்தனர்.

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த பொதுக் குழு கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரு பதவிகளை உருவாக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்பின்னர் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவியேற்றனர். இந்த நிலையில் இடைக்கால பொது செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கிய தீர்மானத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி வி.கே.சசிகலா சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர முடியாது என உத்தரவிட்டு வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. உரிமையியல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில், கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டமானது சட்ட விதிகளின் படி கூட்டப்படவில்லை, அந்த கூட்டத்தில் அவர்களாகவே தங்களை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யபட்டதாக வாதிடப்பட்டது.

முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தபோது கூட எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனவும், தற்போது வரை அதிமுகவில் உறுப்பினராக தான் உள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தான் என தெரிவிக்கப்பட்டது.

அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில், உரிய விதிகளின் படி பொதுக்குழு நடைபெற்றது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உறுதி செய்துள்ளதாகவும், கட்சியின் உச்ச பட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழு விதிகளின் படி கூடி தீர்மானம் நிறைவேற்றியதாகவும், எனவே சசிகலாவின் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக தானும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கபட்ட நிலையே தற்போது வரை நீடிப்பதாகவும், இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலாவை நீக்கியது சட்டப்படி செல்லும் எனவும் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வரும் டிசம்பர் 4ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக கூறி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: கணவரை பிரிந்த திரெளபதி நடிகை ஷீலா ராஜ்குமார்.. எக்ஸ் பக்கத்தில் விலகல் குறித்து திடீர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.