ETV Bharat / state

சென்னை சத்யபாமா கல்லூரியில் கோஷ்டி மோதல் வீடியோ!

author img

By

Published : Nov 30, 2022, 6:58 PM IST

கல்லூரி மாணவர்கள் கோஷ்டியாக மோதிக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே கோஷ்டி மோதல்

சென்னை: ஓஎம்ஆர் பகுதியில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த 28-ம் தேதி கல்லூரியில் உள்ள கேண்டீனில் உணவு உண்பதற்காக முதலாமாண்டு மாணவர்கள் சென்றுள்ளார்கள்.

அப்போது அங்கு ஏற்கனவே சாப்பிட்டுக் கொண்டிருந்த இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள், முதலாமாண்டு மாணவர்கள் செல்ல வழிவிடாமல் தடுத்துள்ளனர். இதை கேட்ட போது, இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இரண்டாமாண்டு மாணவர்கள் முதலாமாண்டு மாணவர்களை அடித்ததாக கூறப்படுகிறது.

இந்த மோதல் பல்கலைக்கழக வளாகத்தில் கோஷ்டி மோதலாக மாறி இரு குழுவாக தாக்கிக் கொண்டனர். இதனை சில மாணவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடீயோ வைரலாகி வருகிறது.

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் கடந்த 17-ம் தேதி தான் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர் ஒருவரை கடத்தி அறையில் வைத்து அடித்ததாக கூறப்பட்டு வந்த சூழலில், தற்போது பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவர்கள் அடித்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட கல்லூரி மாணவியை தாக்கிய கும்பல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.