சென்னை: தாம்பரம் காவல் நிலையத்தில் ரோந்து வாகனத்தில் சுற்றுக்காவல் மேற்கொள்ளும் உதவி ஆய்வாளர் குமார் என்பவர் பானிபூரி கடைக்காரரிடம் 500 ரூபாய் லஞ்சம் பெற்றதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
தாம்பரம் ஆணையரக கட்டுப்பாட்டு அறையின் மூலம் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ரோந்து பணிக்காக ரோந்து வாகனத்தில் உதவி ஆய்வாளர்கள் பணியமர்த்தப்படுவர்.
அவ்வாறு பணி மேற்கொண்டு வரும் உதவி ஆய்வாளர் குமார் சாலையோர கடைகளில் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு இருந்த நிலையில் தற்போது வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தொடர்பாக தாம்பரம் துணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விசாரணை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: பங்குசந்தை ஆசை காட்டி நண்பரிடம் ரூ. 40 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது