ETV Bharat / state

ஊரடங்கு உத்தரவு மீறல்: மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் - வாகனம் பறிமுதல்

சென்னை: ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை மூன்று ஆயிரத்து 616 வாகனங்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

வாகனங்கள் பறிமுதல்
வாகனங்கள் பறிமுதல்
author img

By

Published : Jun 20, 2020, 8:04 PM IST

சென்னையில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கானது அமலில் இருந்து வருகிறது. இந்த முறை ஊரடங்கானது கடுமையாகப் பின்பற்றபடும் என காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் எச்சரித்திருந்தார்.

அதனடிப்படையில், அத்தியாவசிய தேவைகள் தவிர வாகனங்களில் சுற்றித் திரிவோரை உடனடியாக பிடித்து வழக்குப்பதிவு செய்து வாகனங்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

நேற்று (ஜூன் 19) காலை ஆறு மணி முதல் இன்று (ஜூன் 20) காலை ஆறு மணி வரை சென்னையில் மட்டும் இரண்டு ஆயிரத்து 39 வழக்குப்பதிவு செய்யப்பட்டு 811 வாகனங்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அதேபோல், போக்குவரத்து விதிகளை மீறியதாக இரண்டு ஆயிரத்து 805 வாகனங்களை போக்குவரத்து காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இதுவரை முழு ஊரடங்கை மீறியதாக மூன்று ஆயிரத்து 616 வாகனங்களைக் காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு கரோனா தொற்று எளிதாகப் பரவி வருவதால் அண்ணா நகர் போக்குவரத்து காவல் துறையினர் புது யுக்தியை கையாண்டு வருகின்றனர். அதாவது அத்தியாவசிய தேவைகள் தவிர அவசியமின்றி வாகனங்களில் வெளியே சுற்றும் நபர்களைக் கண்டால் தடுப்பு பணியில் உள்ள காவலர்கள் உடனடியாக குறிப்பிட்ட நபரின் வாகன சாவியை எடுத்துக் கொள்கின்றனர்.

பின்னர் அந்த இடத்தில் வரையப்பட்ட வட்டத்தில் அந்த குறிப்பட்ட நபரை நிற்க வைத்து போக்குவரத்து ஆய்வாளர் மைக்கில் அவரிடம் வசிக்கும் இடம், வெளியே சுற்றுவதற்கான காரணம், இ_பாஸ் மற்றும் லைசன்ஸ் எண் ஆகியவற்றைக் கேட்கின்றனர்.

பின்னர், அவர் தேவையின்றி வெளியே சுற்றுபவர் என்று கண்டறியபட்டால் காவலர்கள் உடனே வாகனத்தைப் பறிமுதல் செய்கின்றனர். இந்த முறையின் மூலம் காவலர்கள் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற முடிகிறது. மேலும், காவலர்களுக்கு கரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கவும் இந்த முறை பயன்படுவதாக போக்குவரத்து காவல் துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.