ETV Bharat / state

ஊரடங்கில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்: சென்னை காவல் ஆணையாளர்

சென்னை: ஊரடங்கு நடவடிக்கையில் காவல் துறை சில கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்கலாம் என்றும் மக்கள் அதை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்தார்.

அ.கா. விஸ்வநாதன்  சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  violate 144 rule in chennai  a k viswanathan  chennai commissioner  144 தடை உத்தரவு  144 தடை உத்தரவு மீறல்
144 தடை உத்தரவு மீறல்: சென்னையில் இன்று மட்டும் 7,773 வழக்குப் பதிவு
author img

By

Published : Jun 23, 2020, 9:07 PM IST

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன் முழு ஊரடங்கையொட்டி அண்ணாசாலை ஸ்பென்சார் பிளாசா அருகில் நடைபெறும் காவல் துறையினரின் வாகனத் தணிக்கை, பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "இன்று (ஜூன் 23) 5ஆவது நாளாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் முழு ஆதரவு அளித்து வருகின்றனர். ஊரடங்கை மீறியதாக இன்று மட்டும் 7,773 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை 23,816 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 144 தடை உத்தரவை கடைபிடிக்காததற்காக இன்று மட்டும் 9,517 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஐந்து நாட்களில் 27,346 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முகக் கவசம் அணிவதற்கும், தகுந்த இடைவெளியை கடைபிடிக்காததற்கும் இன்று மட்டும் 3,888 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அ.கா. விஸ்வநாதன் பேட்டி

இதுவரை மொத்தம் 11,412 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசுப் பணியாளர்களை மறித்து இ-பாஸ் கேட்ட சம்பவம் முதல் இரண்டு நாட்கள் மட்டுமே நடந்தது. தற்போது அடையாள அட்டை காண்பித்தவுடன் அனுமதிக்கிறோம். மருத்துவப் பணியாளர்களை அழைத்து வருபவர்கள் பணியாளர்களின் அடையாள அட்டையை நகலெடுத்து அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

காவல்துறை யாருக்கும் எதிராக நடந்து கொள்ளவில்லை. ஊரடங்கு நடவடிக்கையில் காவல்துறை சில கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்கலாம். அதனை மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். அரசு அனுமதி அளித்துள்ள காலை 6 மணி முதல் நண்பகல் 2 மணி வரையில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ளது. மக்கள் தினமும் பொருள்களை வாங்காமல் ஒரு வாரத்திற்கு தேவையான பொருள்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த ஊரடங்கில் குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 64,000-ஐ கடந்த கரோனா பாதிப்பு.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.