சென்னை: தமிழ்நாடு அரசு மற்றும் வியட்நாமின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளரான வின்பாஸ்ட் நிறுவனத்தின் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து வின்பாஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் வின்பாஸ்ட் நிறுவனம் அமைய உள்ளது. இதற்காக முதல் கட்டமாக 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டைக் கொண்டு செயல்பட உள்ளது. இந்த முன்னெடுப்பு காரணமாக வின்பாஸ்ட் நிறுவனம், உலகின் மூன்றாவது வாகனச் சந்தை விரிவு செய்யப்படும்.
-
VINFAST TO BUILD INTEGRATED ELECTRIC VEHICLE FACILITY IN TAMIL NADU, INDIA
— VinFast (@VinFastofficial) January 6, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
Learn more at: https://t.co/HineU5UkzX#VinFast #BoundlessTogether #ElectricCar #ElectricVehicle
">VINFAST TO BUILD INTEGRATED ELECTRIC VEHICLE FACILITY IN TAMIL NADU, INDIA
— VinFast (@VinFastofficial) January 6, 2024
Learn more at: https://t.co/HineU5UkzX#VinFast #BoundlessTogether #ElectricCar #ElectricVehicleVINFAST TO BUILD INTEGRATED ELECTRIC VEHICLE FACILITY IN TAMIL NADU, INDIA
— VinFast (@VinFastofficial) January 6, 2024
Learn more at: https://t.co/HineU5UkzX#VinFast #BoundlessTogether #ElectricCar #ElectricVehicle
தூத்துக்குடி மாவட்டத்தில் அமையவுள்ள வின்பாஸ்ட் நிறுவனம், ஆண்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது. ஆலையின் கட்டுமானப் பணி, 2024ஆம் அண்டு தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் உள்நாட்டில் சுமார் 3,000 - 3,500 வேலைவாய்ப்புகளை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் வளர்ச்சி வாய்ப்புகளைப் பெறுவதையும், மின்சார வாகனச் சந்தையை வேகமாக விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், வின்பாஸ்ட் நிறுவனம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X வலைத்தளப் பக்கத்தில், "உலகின் முன்னணி மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதி செய்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் மின்சார வாகனம் மற்றும் மின்கலன் உற்பத்தி தொழிற்சாலையை வின்பாஸ்ட் நிறுவனம் அமைக்கவுள்ளது. இது வெறும் முதலீடு அல்ல, தென் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல்!
-
உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான @VinFastofficial தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது.
— M.K.Stalin (@mkstalin) January 6, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் #EVCar மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை VinFast நிறுவனம் அமைக்கவுள்ளது.… https://t.co/iGFj5PnaFI pic.twitter.com/aHcVOiUett
">உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான @VinFastofficial தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது.
— M.K.Stalin (@mkstalin) January 6, 2024
அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் #EVCar மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை VinFast நிறுவனம் அமைக்கவுள்ளது.… https://t.co/iGFj5PnaFI pic.twitter.com/aHcVOiUettஉலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான @VinFastofficial தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது.
— M.K.Stalin (@mkstalin) January 6, 2024
அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் #EVCar மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை VinFast நிறுவனம் அமைக்கவுள்ளது.… https://t.co/iGFj5PnaFI pic.twitter.com/aHcVOiUett
தமிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனித வளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளும் வின்பாஸ்ட் நிறுவனத்தாருக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக எனது மனமார்ந்த நன்றிகள். தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாடு 2024-இல் இன்னும் இது போன்ற பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள்” என தெரிவித்துள்ளார்.
வின்பாஸ்ட் நிறுவனத்தின் துணை சி.இ.ஓ டிரான் மாய் ஹோவா கூறும்போது, "தமிழ்நாடு அரசு மற்றும் வின்பாஸ்ட் நிறுவனத்தின் இடையேயான ஒப்பந்தத்தின் மூலம் புகையில்லா போக்குவரத்து உருவாக்க முடியும். பொருளாதார வளர்ச்சி மற்றும் பசுமை மாற்றத்தை நாடு முழுவதும் உருவாக்க உதவும்" என தெரிவித்துள்ளார்.
-
FANTASTIC NEWS FOR SOUTH #TamilNadu !!!
— Dr. T R B Rajaa (@TRBRajaa) January 6, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
Global #EV GIANT #VinFast has confirmed entry into #India via TN 🙏🏾
Beating expectations and speculations @VinFastofficial will be setting up BOTH its #EVCar and #Battery #manufacturing plant in #Thoothukudi with a Overall Investment of… https://t.co/WwPGQJU6wM pic.twitter.com/PkTiVUh19b
">FANTASTIC NEWS FOR SOUTH #TamilNadu !!!
— Dr. T R B Rajaa (@TRBRajaa) January 6, 2024
Global #EV GIANT #VinFast has confirmed entry into #India via TN 🙏🏾
Beating expectations and speculations @VinFastofficial will be setting up BOTH its #EVCar and #Battery #manufacturing plant in #Thoothukudi with a Overall Investment of… https://t.co/WwPGQJU6wM pic.twitter.com/PkTiVUh19bFANTASTIC NEWS FOR SOUTH #TamilNadu !!!
— Dr. T R B Rajaa (@TRBRajaa) January 6, 2024
Global #EV GIANT #VinFast has confirmed entry into #India via TN 🙏🏾
Beating expectations and speculations @VinFastofficial will be setting up BOTH its #EVCar and #Battery #manufacturing plant in #Thoothukudi with a Overall Investment of… https://t.co/WwPGQJU6wM pic.twitter.com/PkTiVUh19b
தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறும்போது, "மின் வாகன உற்பத்தி என்பது பொருளாதார அடிப்படையில் மட்டும் இல்லாமல், மாநிலத்தின் பசுமை திட்டத்தை முன்னெடுப்பது ஆகும். மேலும் வின்பாஸ்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது மகிழ்ச்சியடைகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வின்பாஸ்ட் நிறுவனத்தின் பங்களிப்பு இருக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இலக்கை எட்டியது ஆதித்யா எல்1.. பிரதமர் வாழ்த்து!