ETV Bharat / state

விக்ரம் லேண்டரைக் கண்டுபிடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழன்!

சென்னை: விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தைக் கண்டறிந்த சென்னை பொறியாளர், தான் எப்படி அதனைக் கண்டுபிடித்தேன் என்பதை விளக்கியுள்ளார்.

vikram lander found by chennai engineer
vikram lander found by chennai engineer
author img

By

Published : Dec 3, 2019, 6:41 PM IST

நிலவை ஆராய்வதற்காக சந்திரயான் - 2 விண்கலத்தை, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இஸ்ரோ விண்ணில் ஏவியது. ஆனால், நிலவில் தரையிறங்கும் கடைசி நிமிடத்தில் விண்கலம் நிலவில் விழுந்தது. இதையடுத்து விண்கலம் நிலவின் எந்த இடத்தில் விழுந்தது, அது செயலில் இருக்கிறதா என்று நாசாவும் இஸ்ரோவும் ஆராய்ந்து வந்த நிலையில், நாசா சந்திரயான் - 2 விண்கலத்தை கண்டுபிடித்துள்ளது.

இதனை நாசா கண்டுபிடித்தாலும், சென்னையைச் சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்ரமணியன் கொடுத்த ஆலோசனை தான், விண்கலம் எங்கே உள்ளதென கண்டுபிடிக்க முடிந்ததாக நாசா பாராட்டியுள்ளது. சண்முக சுப்ரமணியனைப் பாராட்டி, நாசா அவருக்கு அனுப்பிய இ -மெயிலை, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்ததிலிருந்து, பல்வேறு தரப்பினரும் அவரைப் பாராட்டு மழையில் நனைத்துள்ளனர். நாசாவுக்கே ஆலோசனை வழங்கிய சண்முக சுப்ரமணியனுக்கு, நாசா மற்றும் இஸ்ரோ வேலை கொடுக்க வேண்டும் என்று இணையதளவாசிகள் கூறி வருகின்றனர்.

இது குறித்து சண்முக சுப்ரமணியம் கூறுகையில், '' சிறுவயது முதல் ராக்கெட் தொடர்பான விஷயங்களில் எனக்கு ஆர்வம் அதிகம். அந்த ஊக்கம் தான் விண்கலம் எங்கு உள்ளதென கண்டுபிடிக்க உதவியது. இதைக் கண்டுபிடிக்க சிறப்புக் கருவிகள் எதையும் நான் பயன்படுத்தவில்லை. சில மாதங்களுக்கு முன் நாசா, நிலவின் பழைய புகைப்படத்தையும் சமீபத்தில் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டு விக்ரம் லேண்டர் எங்கு உள்ளதென கண்டுபிடியுங்கள் என்று பதிவிட்டிருந்தது. அதன்படி, இரு புகைப்படங்களையும் வைத்து ஒவ்வொரு பகுதியாக ஆராய்ந்து பார்த்தேன்.

சண்முக சுப்ரமணியனின் பேட்டி

அவ்வாறு ஆராய்ந்து பார்க்கும்போது, ஒரு புள்ளி மட்டும் நிலவின் பழைய புகைப்படத்தில் இல்லாதிருப்பதைக் கண்டேன். அந்தப் புள்ளி புதிய புகைப்படத்தில் சற்று வித்தியாசமாக இருந்ததால், அது விக்ரம் லேண்டராக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம் என்று கூறி, நாசாவுக்கு இ-மெயில் அனுப்பினேன். அதனை வைத்து ஆராய்ந்து பார்ப்பதாக நாசா எனக்குப் பதிலளித்திருந்தது. தற்போது அதனை நாசா கண்டுபிடிக்கவும் செய்துவிட்டது. இருப்பினும், நாசா என்னை அங்கீகரித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இதைக் கண்டுபிடிக்கும் அளவிற்கு எனக்கு அறிவியல் அறிவு எதுவும் தேவைப்படவில்லை. இரு புகைப்படங்களையும் ஒப்பிட்டு கண்டுபிடித்தேன். நான் கண்டுபிடித்தது பெரிய விசயமே இல்லை'' என்றார்.

எது எப்படியோ நாள் முழுதும் விண்கலங்கள் செயற்கைக்கோள்களோடு வாழ்க்கை நடத்தும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியாத ஒன்றை, மிகச் சாதாரணமாக சண்முக சுப்ரமணியன் கண்டுபிடித்துள்ளார் என்பதே அசாதாரணமான விஷயம் என்பதால் அவருக்கு நாமும் வாழ்த்துகளை தெரிவிப்போம்...!

இதையும் படிங்க: சூரியனை சுற்றி வந்த புதன் – நாசா வெளியிட்ட அரிய காட்சி

Intro:Body:
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக சந்தராயன் 2 இஸ்ரோ விண்ணில் ஏவியது இறுதிகட்டத்தில் தோல்வியுற்றது அதிலிருந்து விக்ரம் லேண்டரை கண்டுபிடிப்பதில் மிகுந்த சவாலாக உள்ளது என நாஸாவும் இஸ்ரோவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழ்கத்தை சேர்ந்த சண்முக சுப்பிரமணியம் கண்டுபிடித்து இமெயில் மூலமாக நாஸாவுக்கு அனுப்பியுள்ளார், நாஸாவும் இதை உறுதி செயதது.

சந்தோஷ் சுப்ரமணியம் பேசுகையில் சிறுவயது முதல் ராக்கெட் தொடர்பான விசயங்களில் ஆர்வம் எனவும் அந்த ஊக்கம் தான் கண்டு பிடிக்க செய்தது எனவும் தெரிவித்தார். இதை கண்டுபிடிக்க கண்டுபிடிக்க சிறப்பு கருவிகள் எதையும் பயன்படுத்தவில்லை அவர் தெரிவித்தார். இந்தியா தான் முதலில் நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதிப் படுத்தியது துரதிஷ்டவசமாக சந்திராயன்-2 வெற்றி பெறவில்லை. இருந்தாலும் இந்தியாவின் முயற்சிக்கு நாம் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும் நாசா தனது இணையதள பக்கத்தில் விண்வெளி ஆராய்ச்சி குறித்த பல்வேறு விஷயங்களை தெரிவித்து வருகிறது அது போல இஸ்ரோவும் விண்வெளி ஆராய்ச்சி குறித்து மக்கள் எளிதில் அணுகும் வகையில் விஷயங்களை வெளியிட வேண்டும் என்றார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.