அமைச்சர் விஜயபாஸ்கர் தனது கைப்பட எழுதி சுஜித்துக்கு உருக்கமான இரங்கலை வெளியிட்டுள்ளார்.
நான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுர்ஜித்தின் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது. என் மனம் வலிக்கிறது.
எப்படியும் வந்துவிடுவாய் என்றுதான் ஊனின்றி உறக்கமின்றி இரவு பகலாய் இமைமூடாமல் உழைத்தோம். இப்படி எம்மை புலம்பி அழவிடுவாய் என்று எண்ணவில்லை.
கருவறை இருட்டுபோல் உள்ளே இருப்பாய் என நினைத்தோம். கல்லறை இருட்டாய் மாறும் என்று எண்ணவில்லை.
மருத்துமனையில் வைத்து உச்சபட்ச மருத்துவம் வழங்க நினைத்துக் காத்திருந்தேன். இப்போது மார்ச்சுவரியில் பார்க்கும் நிலையில் இதயம் கனத்துக்கிடக்கிறது.
எண்பத்தைந்து அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சுச்சத்தம்தான் என்னை மீட்பு பணியில் ஒரு தந்தை ஸ்தானத்தில் பாசப் பிணைப்பில் இணைத்து இயங்க வைத்தது.
மனதைத் தேற்றிக் கொள்கிறேன். ஏன் என்றால், இனி நீ கடவுளின் குழந்தை.
சோகத்தின் நிழலில் வேதனையின் வலியில்... - என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தனது இரங்கலை கைப்பட எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: சுஜித் மீட்புப் பணிகள்: விஜய பாஸ்கரை பாராட்டிய பொன்னார்!