சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று (டிச.28) காலை 6.10 மணியளவில் காலமானார். இது அவருக்கு உள்ள லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் தமிழ்நாட்டின் அரசியலுக்கும், திரையுலகினருக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும். விஜயகாந்த் மறைவால் தமிழ்நாடு முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று (டிச.29) காலை சுமார் 6:00 மணியளவில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பலத்த போலீசார் பாதுகாப்புடன் சென்னை உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து சென்னை தீவித்திடலில் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னை, அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் கண்ணீருடன் குவிந்த வண்ணம் உள்ளனர்.
- — Vijayakant (@iVijayakant) December 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Vijayakant (@iVijayakant) December 28, 2023
">— Vijayakant (@iVijayakant) December 28, 2023
இன்று காலை 6 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு உடல் வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலிருந்து மதியம் 1 மணியளவில் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக, தேமுதிக தலைமை கழக அலுவலகம் சென்றடையும்.
அதன் பின்னர் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, மாலை 4.45 மணியளவில் தேமுதிக தலைமை அலுவலகத்தின் வளாகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக என தேமுதிக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரையில் விஜயகாந்த் சிலையை நிறுவ காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கோரிக்கை..!