தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் பதிவு செய்துவருகின்றனர்.
இந்நிலையில், தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட சாலிகிராமத்தில் உள்ள காவோி பள்ளியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன்களுடன் வாக்களித்தார்.
இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், வேலூர் தொகுதி தேர்தல் ரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், எப்போது அங்கு தேர்தல் நடந்தாலும் அதிமுக கூட்டணிதான் வெல்லும் என்றும் கூறினார்.