சென்னை: கேப்டன் என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த் தனது 71ஆவது பிறந்தநாளை இன்று (ஆகஸ்ட் 25) கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை நேரில் சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கைகளை அசைத்தும், வணக்கம் வைத்தும் வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார்.
தேமுதிக தொண்டர்கள் தங்களது கேப்டனை நேரில் பார்த்த ஆர்வத்தில் கைகளை தூக்கி கரகோஷங்கள் எழுப்பி, உற்சாகத்துடன் வாழ்த்துகளை தெரிவித்தனர். குறிப்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பிறந்தநாளை ஆண்டுதோறும் அக்கட்சியினர் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று காலையிலிருந்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. விஜயகாந்தை பார்க்க தமிழ்நாடு முழுவதும், பல்வேறு இடங்களில் இருந்து ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர். இதனால் தேமுதிக தலைமை அலுவலகம் விழாக்கோலம் போன்று இருந்தது.
-
இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில், U. அன்பு அவர்களின் இயக்கத்தில், எனது இளையமகன் சண்முகபாண்டியன் நடிக்கும் "படைத்தலைவன்" புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் #FirstLook poster #சண்முகபாண்டியன் | #படைத்தலைவன் #இசைஞாணி #இளையராஜா #Uஅன்பு pic.twitter.com/CvbA5aTxmc
— Vijayakant (@iVijayakant) August 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில், U. அன்பு அவர்களின் இயக்கத்தில், எனது இளையமகன் சண்முகபாண்டியன் நடிக்கும் "படைத்தலைவன்" புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் #FirstLook poster #சண்முகபாண்டியன் | #படைத்தலைவன் #இசைஞாணி #இளையராஜா #Uஅன்பு pic.twitter.com/CvbA5aTxmc
— Vijayakant (@iVijayakant) August 25, 2023இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில், U. அன்பு அவர்களின் இயக்கத்தில், எனது இளையமகன் சண்முகபாண்டியன் நடிக்கும் "படைத்தலைவன்" புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் #FirstLook poster #சண்முகபாண்டியன் | #படைத்தலைவன் #இசைஞாணி #இளையராஜா #Uஅன்பு pic.twitter.com/CvbA5aTxmc
— Vijayakant (@iVijayakant) August 25, 2023
மேலும் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்க உள்ள "படை தலைவன்" படத்தின் பர்ஸ்ட் லுக்கை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டு பெரிய திரையில் பார்த்து ரசித்தார். இயக்குனர் அன்பு இப்படத்தை எழுதி, இயக்க இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார்.
நடிகர் ராஜேஷ், நகைச்சுவை நடிகர் போண்டா மணி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன், இளைய மகன் சண்முகபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
மேலும் கழக துணை செயலாளர் பார்த்தசாரதி, அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன், கொள்கைபரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர். படை தலைவன் படத்தின் படகுழுவினரும் கலந்து கொண்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.