நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாததால் அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்செய்தி பரவத் தொடங்கியதிலிருந்து, தொண்டர்கள் மத்தியில் பெரும் கவலை எழுந்துள்ளது. ஆனால், வழக்கமான சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளதாகவும், அவரது உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தேமுதிக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுமட்டுமின்றி, அவர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சொகுசு கார் விவகாரம் - நுழைவு வரி செலுத்தினார் விஜய்!