கோயம்புத்தூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, இந்தத் தீர்ப்புக்கு தேமுதிக சார்பில் பாராட்டுத் தெரிவித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் இந்தத் தீர்ப்பை வரவேற்பதாகவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற செயல்களைச் செய்ய அஞ்சி வெட்கப்படக் கூடிய ஒரு சூழ்நிலையை இந்தத் தீர்ப்பு வழங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
- — Vijayakant (@iVijayakant) December 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Vijayakant (@iVijayakant) December 27, 2019
">— Vijayakant (@iVijayakant) December 27, 2019
பெண் பிள்ளைகளுக்கு இதுபோன்ற ஒரு நிகழ்வுகள் நடக்காத வண்ணம் ஒரு நல்ல தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி இருக்கிறது என்று தெரிவித்த விஜயகாந்த், இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கு தேமுதிக சார்பாக தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பதஞ்சலி நிறுவன பெயரைப் பயன்படுத்தி ரூ. 17 லட்சம் மோசடி!