ETV Bharat / state

Leo Update: வெளியானது 'லியோ' அப்டேட்.. லோகோஷ் கனகராஜ் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்! - leo update

நடிகர் விஜயின் பிறந்தநாளான ஜூன் 22-ஆம் தேதி லியோ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ளதாக அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Leo update
லியோ அப்டேட்
author img

By

Published : Jun 16, 2023, 5:44 PM IST

சென்னை: நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருகிறார். ஆரம்ப காலத்தில் காதல் படங்களில் நடித்து வந்த விஜய், அதனைத் தொடர்ந்து ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார். மேலும், தனக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளார்.

ரசிகர் மன்றங்களை தற்போது 'விஜய் மக்கள் இயக்கம்' என மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அதன் மூலம் செய்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வந்த 'வாரிசு' திரைப்படத்தின் மூலம், முதல் முறையாக தெலுங்கு இயக்குநரின் இயக்கத்தில் நடித்தார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக வெற்றிப்படமாக அமைந்தது.

இதனை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 'லியோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. செவன் ஸ்கிரீன் (7 Screen) ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தில் த்ரிஷா, மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், அர்ஜுன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் லியோ படத்தில் மெயின் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய திரைப்பட ரசிகர்கள் மத்தியில் அவருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் லியோ படத்தில் அவர் இணைந்திருப்பது விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இப்படமும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சில் இணையுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏனென்றால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'விக்ரம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இப்படமும் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்று ரசிகர்களால் பெருமளவு எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது என்று விஜய் ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் இன்று மாலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில்,Ready ah? என்று பதிவிட்டிந்தார். இது விஜய் ரசிகர்களை லியோ படத்தின் அப்டேட் வெளியாக உள்ளது என்ற உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இதனிடையே சற்று முன் விஜயின் பிறந்தநாள் அன்று 'லியோ' படத்தின் முதல் பாடலான #NaaReady நானே ரெடி வெளியாக உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.