ETV Bharat / state

ஜூன் 16ல் ZEE5 ஓடிடியில் வெளியாகும் 'தமிழரசன்' திரைப்படம்! - தமிழரசன்

விஜய் ஆண்டனியின் நடிப்பில், கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியான 'தமிழரசன்' திரைப்படம் நாளை(ஜூன் 16) ZEE5 யில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamizharasan Movie
தமிழரசன் திரைப்படம்
author img

By

Published : Jun 15, 2023, 6:38 AM IST

சென்னை: விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளர், நடிகர், இயக்குநர், எடிட்டர் எனப் பன்முகத் திறமையுடன் பணியாற்றி வருபவர். இவரது நடிப்பில் இந்த ஆண்டு பிச்சைக்காரன் 2 சமீபத்தில் வெளியானது. முதல் பாகத்தின் வெற்றியால் இந்த இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் இப்படத்தை விஜய் ஆண்டனியே இயக்கியும் இருந்தார்.

முன்னதாக விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழரசன் என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி மற்றும் சோனு சூட் ஆகியோர் நடித்துள்ளனர். SNS புரொடெக்ஷன் நிறுவனத்தின் கீழ் எஸ். கௌசல்யா ராணி தயாரித்துள்ள தமிழரசன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியானது.

படத்தில் தமிழரசனாக விஜய் ஆண்டனி இரக்கக் குணம் கொண்ட ஒரு போலீஸ் அதிகாரியாகவும், அவரும் அவரது அன்பு மனைவி லீனாவும் (ரம்யா நம்பீசன்) தங்கள் மகன் பிரபாகருக்கு (பிரணவ் மோகன்) இதயம் பலவீனமாக இருப்பதாகவும், எவ்வளவு விரைவில் மாற்று அறுவை சிகிச்சைக்குச் செல்கிறார்களோ அவ்வளவு நல்லது என்பதை அறிந்த அதிர்ச்சியுற்றனர்.

மகனைச் சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அம்மருத்துவமனை இலாப நோக்கம் அதிகம் கொண்ட மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் கல் நெஞ்சம் கொண்ட மருத்துவர்களால் நிரம்பியுள்ளனர். மேலும், ஓர் அமைச்சருக்கும் இதய மாற்றுச் சிகிச்சைக்காக அம்மருத்துவமனையில் இருப்பதால், பிரபாகருக்கு மருத்துவமனை முக்கியத்துவம் அளிக்க மறுக்கிறது.

ஆத்திரமடைந்த தமிழரசன் மருத்துவமனையின் இதய நிபுணர் டாக்டர் முருகானந்தத்தை (சுரேஷ் கோபி) பிணைக் கைதியாகப் பிடித்து, முதலில் தனது மகனுக்குச் சிகிச்சை அளிக்க வற்புறுத்த முடிவு செய்கிறார். அவரால் தனது மகனைக் காப்பாற்ற முடியுமா, குறிப்பாக அவரது உயர் அதிகாரி ராணா பிரதாப் சிங் (சோனு சூத்), இவரை வெல்ல விடுவாரா? என்பதே படத்தின் கதை. விறுவிறுப்பான ஆக்‌ஷன் த்ரில்லராக உருவான இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார், ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவாளராக ஆர்.டி ராஜசேகர் மற்றும் பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் சாயா சிங், சங்கீதா கிரிஷ், யோகி பாபு, பாண்டிய ராஜன், கஸ்தூரி, முனிஷ்காந்த், ரோபோ சங்கர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர் மற்றும் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியான தமிழரசன் திரைப்படம், வரும் ஜூன் 16ம் தேதி ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இதுகுறித்து இயக்குநர் பாபு யோகேஸ்வரன் பேசுகையில், “விஜய் ஆண்டனி உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பான அனுபவம். அவர்கள் என் கருத்துரு மேல் நம்பிக்கை கொண்டு தங்கள் அனைத்து திறமையையும் வெளிக்காட்டினர். எங்களது இந்த உணர்வுப் பூர்வமான திரைப்படம் ZEE5-இல் உலக டிஜிட்டல் பிரீமியர் மூலம் உலகளாவிய பார்வையாளர்களைச் சென்றடையும் என்று நம்புகிறேன்.” என்றார்.

நடிகர் விஜய் ஆண்டனி இதுகுறித்து பேசுகையில், “இயக்குநரின் கருத்துரு அளித்த நம்பிக்கை என்னை இப்படத்தில் இணைத்தது. கிட்டத்தட்ட அச்சத்தை ஏற்படுத்தும் சமூகத்தைக் பிரதிபலிக்கும் காட்சிகளைத் தமிழரசன் திரைப்படத்தில் இணைத்துள்ளார். மேலும் இந்தப் படம் வலுவான செய்தியை வழங்குவதில் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். திரையரங்குகளில் வெளியானாலும், இந்தப் படத்தைப் பற்றி அறியாதோர் அல்லது காணாதோர் இன்னும் பலர் இருக்கிறார்கள். தமிழரசன் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய முக்கியமான கதை என்பதால் ஜூன் 16 ஆம் தேதி ZEE5 இல் பார்க்க வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்.” என்றார் விஜய் ஆண்டனி.

இதையும் படிங்க: SJ Surya, Ajith Combo: மீண்டும் "வாலி" கூட்டணியா? எஸ்.ஜே.சூர்யா சொன்ன பாசிட்டிவ் பதில்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.