ETV Bharat / state

முற்றிலும் பொய்யே.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் ஆண்டனி! - Music Director AR Rahman

Vijay Antony: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு விஜய் ஆண்டனிக்கு தொடர்பு உள்ளதாக யூடியூப் சேனல் ஒன்றில் கூறி இருந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.

AR Rahman - Vijay antony
AR Rahman - Vijay antony
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2023, 10:08 PM IST

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய அளவில் மிகவும் முக்கியமான இசை அமைப்பாளராக அறியப்படுபவர். இந்நிலையில் இவரது ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. ஆனால், டிக்கெட் குளறுபடி காரணமாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது.

இதனால் ஏ.ஆர்.ரஹ்மான் மீது ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ஏராளமான ரசிகர்கள் உள்ளே செல்ல முடியாமல் சோகத்துடன் வீடு திரும்பினர்.‌ மேலும், கடுமையான போக்குவரத்து நெரிசலை எதிர்கொண்டு உண்மையில் அந்த நாள் அவர்களுக்கு மறக்க முடியாத நாளாக மாறியது.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி அளித்தது. மேலும், இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மானும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், யூடியூப் சேனல் ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்த எல்லா குளறுபடிகளும் திட்டமிடப்பட்ட ஒன்று. அதற்கு முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர்தான் காரணம் தெரிவித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானை பழிவாங்கி அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இது நடத்தப்பட்டதாக கூறியுள்ளனர்.

மேலும், இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கும் இதில் தொடர்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் மீது உள்ள தொழில் போட்டியால் அரசியல் பிரமுகர் உடன் சேர்ந்து இது போன்ற விஷயங்களை செய்துள்ளார் என்றும், அதற்கான ஆடியோ சான்று உள்ளதாகவும் அந்த யூடியூப் சேனல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி தனது விளக்கத்தை அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். அதில், "என் மீது அன்பு கொண்ட, என் அன்பு மக்களுக்கு வணக்கம். நான் இப்போது சிறு மன வேதனையுடன், இந்த கடிதம் மூலம் சில சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

ஒரு சகோதரி, யூடியூப் சேனல் ஒன்றில், என்னையும் சகோதரர் ஏஆர் ரஹ்மானையும் தொடர்புபடுத்தி பொய்யான வதந்தி ஒன்றை பரப்பி இருக்கிறார். அது முற்றிலும் பொய்யே, அந்த யூடியூப் சேனல் மீது நான் மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன். மான நஷ்ட வழக்கில் வரும் தொகை அனைத்தையும், நலிவடைந்த இசைத்துறை நண்பர்களுக்கு முழுமையாக கொடுக்க முடிவு செய்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னையை கலக்க ரெடியாக இருக்கும் லியோ விநாயகர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.