ETV Bharat / state

அவதூறு வழக்கில் வைகோ விடுதலை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: கருணாநிதிக்கு எதிரான அவதூறு வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை செய்யப்பட்டார்.

vaiko, karunanidhi
author img

By

Published : Aug 30, 2019, 12:03 PM IST

2006-ஆம் ஆண்டு திமுக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கிடை பிரச்னையின் உச்சகட்ட காலம் என்றே குறிப்பிடலாம். அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக கருணாநிதி பதவியில் இருந்தார். மதிமுகவில் இருந்த முக்கிய பொறுப்பாளர்கள் பலரும் திமுகவில் இணைந்தனர். இதனால் மனமுடைந்த வைகோ, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு எதிராக, அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அந்தக் கடிதத்தில், திமுக, மதிமுக-வை உடைக்கப் பார்க்கிறது. பணம் கொடுத்து எங்களது தொண்டர்களை கருணாநிதி திமுக பக்கம் இழுக்க பார்க்கிறார். இதனால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக சார்பில் மனு அனுப்பப்பட்டிருந்தது. இதனால், திமுக சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதனை எதிர்த்து வைகோ தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டு அவதூறு வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது.

வைகோ மீதான அவதூறு வழக்கு 13 வருடங்களாக எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் நிலுவையில் இருந்து வந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் சில நாட்களுக்கு முன்பு நிறைவு பெற்றன. கடந்த வாரம் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வைகோ உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து இவ்வழக்கின் தீர்ப்பு தேதி இன்று ஒத்திவைக்கப்பட்டது.

தண்டனை நிரூபிக்கப்பட்டால், வைகோவிற்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் என்றும் இதனால் அவரது மாநிலங்களவை எம்பி பதவி பறிபோகும் என கூறப்பட்டுவந்தது. இந்நிலையில், இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக வைகோ இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதற்கான காரணங்களை கூறி அவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருணாநிதி, பத்திரிகை செய்தியை தவிர்த்து வேறு எந்த ஆதாரங்களையும் அரசு தரப்பில் தாக்கல் செய்யவில்லை என்பதால் இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி வைகோவை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Intro:Body:

அவதூறு வழக்கில் இருந்து  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை

மதிமுக வை உடைக்க முயற்சிபதாக மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக வைகோவுக்கு எதிராக அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

 இந்த வழக்கில் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருணாநிதி தீர்ப்பு வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி வைகோவை விடுதலை செய்து தீர்ப்பு 

பத்திரிகை செய்தியை தவிர்த்து வேறு எந்த ஆதாரங்களையும் அரசு தரப்பில் தாக்கல் செய்யவில்லை

 செய்தியை எழுதிய நிருபரை விசாரிக்கவில்லை

 அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என வைகோ விடுதலை

உடல்நலக்குறைவு காரணமாக வைகோ இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை அதற்கான காரணங்களை கூறி அவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதால் என்று தீர்ப்பளித்து உள்ளதாக கூறி வழக்கில் தீர்ப்பு அளித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.