ETV Bharat / state

மைலாப்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை! - மைலாப்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

சென்னை: ஆழ்வார்பேட்டை பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள மயிலாப்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

raid
author img

By

Published : Oct 18, 2019, 10:40 PM IST

சென்னை ஆழ்வார்பேட்டை பாரதிதாசன் சாலையில் மயிலாப்பூர் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. கட்டுமான நிறுவன பணிக்காக வழக்கறிஞர் பிரபு என்பவர் 40,000 ரூபாய் பணத்தை லஞ்சமாக சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் கொடுக்க உள்ளதாக அலுவலர்களுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

லஞ்ச ஊழல் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி பாஸ்கரன், டிஎஸ்பி குமரகுருபரன் தலைமையில் ஆறு இன்ஸ்பெக்டர் உட்பட 15க்கும் மேற்பட்ட அலுவலர்கள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளதாகவும், அது குறித்த முழு தகவல் சோதனை நிறைவடைந்த பின்பே தெரிய வரும் எனவும் அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'ஜெயலலிதா கைரேகை போலியானது' - திமுக எம்எல்ஏ டெல்லி சிபிஐயிடம் மனு

Intro:Body:*மைலாப்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை...*

சென்னை ஆழ்வார்பேட்டை பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள மயிலாப்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையானது சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் கட்டுமான நிறுவன பணிக்காக வழக்கறிஞர் பிரபு என்பவர் 40,000 ரூபாய் இலஞ்சம் கொடுக்க உள்ளதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சோதனையில் லஞ்ச ஊழல் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி பாஸ்கரன் மற்றும் டிஎஸ்பி குமரகுருபரன் தலைமையில் ஆறு இன்ஸ்பெக்டர் உட்பட 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளதாகவும் அது குறித்த முழு தகவல் சோதனை நிறைவடைந்த பின்பே தெரிய வரும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.