ETV Bharat / state

ரூட்டு தல தகராறு! மாணவனின் அரை நிர்வாண காணொலி வைரல் - intimidating tone

சென்னை: பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான மோதல் விவகாரத்தில் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்தரப்பு மாணவனை மிரட்டி அரை நிர்வாணத்தில் காணொலி எடுத்து வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Student clash issue
author img

By

Published : Jul 24, 2019, 5:10 PM IST

Updated : Jul 24, 2019, 7:46 PM IST

சென்னை அரும்பாக்கம் மெகா மார்ட் ஷோரூம் அருகே பெரம்பூரிலிருந்து திருவேற்காடு செல்லும் '29E' அரசுப் பேருந்தில் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இருதரப்பு மாணவர்களுக்கு இடையே 'ரூட்டு தல' (யார் பெரிய ஆள்) விவகாரத்தில் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில் ஒரு தரப்பினர் அவர்கள் வைத்திருந்த அரிவாளால் மற்றொரு தரப்பு மாணவர்களை சரமாரியாக வெட்டத் தொடங்கினர். இதைக்கண்ட பயணிகள் பேருந்தை விட்டு இறங்கி அலறியடித்து ஓடினர்.

இந்தப் பிரச்னையில் இரண்டாமாண்டு தத்துவம் படிக்கும் மாணவன் வசந்தகுமார் உள்ளிட்ட இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் இது தொடர்பாக பொதுமக்கள் அளித்தப் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அரும்பாக்கம் காவல் துறையினர், காயமடைந்த மாணவர்கள் இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

விஸ்வரூபமெடுக்கும் ரூட்டு தல விவகாரம்

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு பேரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், இந்தச் சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் எதிரணியிலிருந்த ஒரு மாணவனை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று அரை நிர்வாண கோலத்தில் அவரது வாயால் தங்களது அணிதான் கெத்து என மிரட்டும் தொனியில் காணொலி எடுத்து வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் இரண்டு மாணவர்களை கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது.

Intro:Body:

சென்னை - பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான மோதலில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு*

இருதரப்பு பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், 2 மாணவர்கள் அரிவாளால் வெட்டப்பட்டனர்.

இந்நிலையில் வெட்டுப்பட்ட அணி பதிலுக்கு பதில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

சென்னை அரும்பாக்கம்  மெகா மார்ட் ஷோரூம் அருகே பெரம்பூரில் இருந்து திருவேற்காடு செல்லும் 29E அரசு பேருந்தில் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இருதரப்பு மாணவர்களுக்கு இடையே ரூட்டு தல விவகாரத்தில் வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஒரு தரப்பினர் அவர்கள் வைத்திருந்த அரிவாளால் மற்றொரு தரப்பு மாணவர்களை நோக்கி சரமாரியாக வெட்டத் தொடங்கினர். இதைக் கண்ட பயணிகள் பேருந்தைவிட்டு இறங்கி அலறியடித்து ஓடத் தொடங்கினர். இந்த பிரச்சனையில் 2ஆம் ஆண்டு தத்துவப் படிப்பு மாணவர் வசந்தகுமார் உள்ளிட்ட 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அரும்பாக்கம் காவல்துறையினர் காயமடைந்த மாணவர்கள் இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதல் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பாக கத்தியால் வெட்டிய அணியில் இருந்து ஒருவரை அழைத்து சென்று பதிலுக்கு பதிலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Conclusion:
Last Updated : Jul 24, 2019, 7:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.