-
TN03BG9797 - Today at Nelson Manickam Road. You can find the time/date stamp and geo location in the video recorded via my car dash camera. Hope action will be taken! @Veera284 @ChennaiTraffic @chennaipolice_ pic.twitter.com/Ax4Xw5aiPN
— Justtotweeet (@raretotweet) December 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">TN03BG9797 - Today at Nelson Manickam Road. You can find the time/date stamp and geo location in the video recorded via my car dash camera. Hope action will be taken! @Veera284 @ChennaiTraffic @chennaipolice_ pic.twitter.com/Ax4Xw5aiPN
— Justtotweeet (@raretotweet) December 29, 2022TN03BG9797 - Today at Nelson Manickam Road. You can find the time/date stamp and geo location in the video recorded via my car dash camera. Hope action will be taken! @Veera284 @ChennaiTraffic @chennaipolice_ pic.twitter.com/Ax4Xw5aiPN
— Justtotweeet (@raretotweet) December 29, 2022
சென்னை: போக்குவரத்து காவல்துறை மற்றும் சென்னை காவல்துறை ட்விட்டர் பக்கத்தில் இணைத்து பொதுமக்கள் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து புகார் அளித்து வருகின்றனர். இதுபோன்ற புகார்களை உடனுக்குடன் காவல்துறை தரப்பில் விசாரணை செய்து அபராதங்களும் விதிக்கப்பட்டு செலான் புகைப்படத்தை சென்னை காவல்துறை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறது.
நடிகர் விஜய், காவல்துறை ஏடிஜிபி, அரசியல் பிரமுகர் என யாராக இருந்தாலும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களை பாரபட்சம் இன்றி சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக காவல்துறையினர் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும்போது பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்ததன் அடிப்படையில், போலீசார் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும், போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கடந்த இரு தினங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் நேற்று (டிச.29) மதியம் அரசு முத்திரையுடன், தேசியக் கொடியுடன் வாகனம் ஒன்று ஒருவழிப்பாதை வழியாக சென்றதை, வாகன ஓட்டி ஒருவர் தனது கார் கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை சென்னை காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் இணைத்து நடவடிக்கை எடுக்கும்படி பதிவிட்டுள்ளார். இந்த பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வீடியோவில் தெளிவாக போக்குவரத்து விதிமீறல் தெரிந்தும், என்ன பிரச்சனை இந்த வாகனத்தில் என சென்னை காவல்துறை பதிவிட்டது. பொதுமக்களிடையே பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. மேலும், இந்த வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தும்போது உயர்நீதிமன்ற பதிவாளர் பெயரில் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த வாகனம் (நீதிபதி சத்திய நாராயண பிரசாத்) பயன்படுத்தும் வாகனம் என்பதும் தெரிய வந்துள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி வாகனமே போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதையும் படிங்க: புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் உள்ளது - பிரதமர் மோடி உருக்கம்