சென்னை: ஐஐடியின் புத்தாக்க மைய திறப்பு நிகழ்ச்சிக்கு பின்னர், குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது கோர்ட்டை கழற்றி வைத்து விட்டு மாணவர்களுடன் உரையாடினார். மேலும் மாணவர்களுடன் கலகலப்பாக பேசியதுடன், சிறப்பாக கேள்வி கேட்ட ஒரு மாணவருக்கு நிகழ்ச்சி முடிந்த பின்னர் தண்ணீர் கொடுத்து குடிக்கச் சொன்னார்.
சென்னை ஐஐடியின் புத்தாக்க மையத்தினை திறந்து வைப்பதற்காக முதல் முறையாக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் சென்னை வந்தார். சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில், ஆராய்ச்சி திட்டங்களை மேம்படுத்துவதற்கு உதவக்கூடிய ஊக்குவிப்பு மையத்தை திறந்து வைத்து பேசினார். மாணவர்களின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட பிறகு மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பாக இருக்கைக்கு வந்த ஜகதீப் தன்கர், தனது ஓவர் கோட்டை கழற்றி சேரில் வைத்துவிட்டு, டீ சர்ட் உடன் மாணவர்களிடம் சகஜமாக, சாதாரணமாக உரையாடினார்.
மாணவர்கள் சிலரின் கேள்விகளுக்கு பதில் அளித்த தன்கர், ”எப்போதும் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். தோல்வி வரும் போது வருத்தப்படக் கூடாது என்றும், தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் நாடு வளர்ச்சி அடைகிறது - பொடி வைத்து பேசிய துணை குடியரசுத்தலைவர்