சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று சென்னை வந்தடைந்தார். அவரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சென்னை விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றனர்.
அப்போது, தலைமை செயலாளர் இறையண்பு, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, பொதுத்துறை செயலாளர் டி. ஜகந்நாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராமானுஜர் திருவுருவ சிலையை பிரதமர் நரேந்திர மோடி பிப்.5ஆம் தேதி திறந்துவைத்தார். இந்தச் சமத்துவ சிலை முச்சிந்தல் பகுதியில் உள்ள சின்ன ஜீயர் ஆசிரமத்தில் 216 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதனை, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு நேற்று (பிப். 12) பார்வையிட்டார். அங்கு பேசிய அவர், "ஒவ்வொரு மனிதனும் சமம் என்ற ஸ்ரீ ராமானுஜாச்சாரியாரின் போதனைகள் கடைப்பிடித்து புதிய இந்தியாவை கட்டமைக்கும் முயற்சியில் அனைவரும் ஈடுபடவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க : மக்களை காப்பாற்றியது மத்திய அரசுதான், திமுக இல்லை - அண்ணாமலை