சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தமிழ்நாடு வந்துள்ளார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, டிஜிபி திரிபாதி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதற்கிடையே, தமிழ்நாட்டிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த நிலையில், வெங்கையா நாயுடு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வருகின்ற சனிக்கிழமை சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வெங்கையா நாயுடு, பின்னர் நெல்லூர் செல்லவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறில் உள்ள மகள் வீட்டில் தங்கியிருக்கும் அவருக்கு Z+ பாதுகாப்பு, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.