சென்னை: தெலங்கானாவில் இருந்து இந்திய விமானப்படையின் தனி விமானத்தில் இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வந்தார்.
இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, சென்னையில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தெலங்கானா மாநிலத்தில் இருந்து இந்திய விமானப்படையின் தனி விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அவரை தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் வரவேற்று பூங்கொத்து கொடுத்தனர். இதையடுத்து சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு புறப்பட்டுச் சென்றார்.
சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின், வருகிற 13ஆம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் புதுச்சேரி புறப்பட்டு செல்கிறார்.
இதையும் படிங்க: பிராமணர்கள் ஆதரவுடன் உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி- மாயாவதி!