சென்னை: தமிழ்சினிமாவின் பிரபல வசனகர்த்தாவான ஆரூர்தாஸ் (91) நேற்று மாலை காலமானார். 1931 ஆம் ஆண்டு திருவாரூரில் பிறந்த ஆரூர்தாஸ் சினிமா மீது கொண்ட ஆசை காரணமாக சென்னைக்கு வந்து, 1955-ம் ஆண்டு தஞ்சை ராமதாசின் உதவியாளராக சினிமா வாழ்க்கையை தொடங்கி, வாழவைத்த தெய்வம் என்ற திரைப்படத்திற்கு முதன் முதலில் வசனம் எழுதினார்.
ஏசுதாஸ் எனும் இவரது பெயரையும் தனது ஊரான திருவாரூரையும் இணைத்து ஆரூர்தாஸ் என வைத்துக் கொண்டார். எம்.ஜி.ஆர்., சிவாஜி என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். என்.ஜி.ஆரின் தாய் சொல்லை தட்டாதே, தாயைக்காத்த தனயன், தொழிலாளி, சிவாஜி கணேசன் நடித்த பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார், புதிய பறவை என பல படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.
மேலும் இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 1000ற்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதி இருக்கிறார். ஆரூர்தாஸ் தமிழில் கடைசியாக 2014-ம் ஆண்டு வடிவேல் நடித்து வெளிவந்த 'தெனாலிராமன்' படத்துக்கு வசனம் எழுதி இருந்தார். வசனகர்த்தாவாக மட்டுமல்லாமல் 1967-ம் ஆண்டு ஜெமினி கணேசன் நடிப்பில் 'பெண் என்றால் பெண்' என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
ஆரூர்தாஸ் சென்னை தியாகராயநகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலன் இன்றி நேற்று மாலை 6.40 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்கு இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
தமிழக அரசின் கலைமாமணி விருது, கவிஞர் வாலி விருது, மக்கள் கவிஞர் விருது, கலைத்துறை வித்தகர் விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். சினிமாவில் தனக்கென தனி இடம் பதித்த ஆரூர்தாசின் மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரைப்பட கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆரூர்தாஸ் மறைவிற்கு ட்விட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
-
திருவாரூர் மண்ணில் பிறந்து ஆயிரம் திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரையுலகில் தனி முத்திரை பதித்த முதுபெரும் வசனகர்த்தா ஆரூர் தாஸ் அவர்கள் உயிரிழந்ததையடுத்து மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். pic.twitter.com/9C0zRnWzSj
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">திருவாரூர் மண்ணில் பிறந்து ஆயிரம் திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரையுலகில் தனி முத்திரை பதித்த முதுபெரும் வசனகர்த்தா ஆரூர் தாஸ் அவர்கள் உயிரிழந்ததையடுத்து மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். pic.twitter.com/9C0zRnWzSj
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 20, 2022திருவாரூர் மண்ணில் பிறந்து ஆயிரம் திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரையுலகில் தனி முத்திரை பதித்த முதுபெரும் வசனகர்த்தா ஆரூர் தாஸ் அவர்கள் உயிரிழந்ததையடுத்து மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். pic.twitter.com/9C0zRnWzSj
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 20, 2022
இதையும் படிங்க: நெடுஞ்சாலையில் பெரும் விபத்து; 48 வாகனங்கள் சேதம்