தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'குக் வித் கோமாளி’ பலரால் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் ’குக் வித் கோமாளி’ நடுவர்களுள் ஒருவரான வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ழ்ச்சியின் போது, தன்னிடம் ஒரு பெண்மணி, ’தான் குக் வித் கோமாளி பார்த்ததால் குழந்தை பிறந்தது’ எனக் கூறியதாக தெரிவித்தார்.
வெங்கடேஷ் பட் கூறியதை சமூக வலைதளங்களில் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் விமர்சனங்கள் தொடர்பாக வெங்கடேஷ் பட் தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உருக்கமாகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘இரண்டு நாட்களாக நான் மிகவும் மனமுடைந்து போனேன். என்னை ட்ரோல் செய்ததற்காக இல்லை. இந்த மீம்ஸ்கள் மனிதம் செத்துவிட்டதாக என்னை உணரச் செய்கிறது. எதுவேண்டுமானாலும் சாகலாம். ஆனால், மனிதம் சாகக்கூடாது.
கடவுள் இருக்காரு குமாரு. நல்லவர்கள் இன்னும் இவ்வுலகில் இருக்கிறார்கள். கீழே உள்ள படம் இப்போது தேசிய அளவில் ட்ரெண்டாகிவருகிறது. அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
குழந்தை செல்வம் உள்ளவர்களுக்கே தெரியும்... அது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று. குழந்தை இல்லாதவர்களை யோசித்துப் பாருங்கள். என்னை கிண்டல் செய்கிறேன் என நினைத்து உங்களை நீங்களே தரம் தாழ்த்திக்கொள்ளாதீர்கள் என மீம்ஸ் க்ரியேட்டர்ஸிடம் கேட்டுக்கொள்கிறேன்’ எனக் கூறி ஹேஷ்டேக்கில் ’மனிதம் எங்கே’ எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ட்விட்டரில் ட்ரெண்டாகும் அஜித்தின் குட்டி ஸ்டோரி - இதுயாருக்கு சொன்ன கதை தெரியுமா?