ETV Bharat / state

சென்னையில் 1,236 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை! - Corona details in chennai

சென்னை: ஆயிரத்து 236 நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Vegetable sale by 1236 vehicles in Chennai!

author img

By

Published : May 25, 2021, 1:17 PM IST

கரோனா தொற்றின் காரணமாக தளர்வுகளற்ற ஊரடங்கு நேற்று (மே 24) முதல் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் நேற்று காலை முதல் நடமாடும் வாகனங்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த காய்கறிகள், பழங்கள் அனைத்தும் விவசாயிகள், வியாபாரிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறன.

சென்னையில், ஆயிரத்து 236 நடமாடும் காய்கறி வண்டிகள் மூலம் மக்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று விற்பனை செய்யப்படுகின்றது. அதிகபட்சமாக அண்ணாநகர் மண்டலத்தில் 299 நடமாடும் காய்கறி வண்டிகள் விற்பனையில் ஈடுபட்டுள்ளன.

அடுத்ததாக வளசரவாக்கம் மண்டலத்தில் 219 வண்டிகளுக்கும், குறைவாக அம்பத்தூர் மண்டலத்தில் 10 நடமாடும் காய்கறி வண்டிகள் மூலம் விற்பனை நடைபெறுகின்றன.

Vegetable sale by 1236 vehicles in Chennai!
Vegetable sale by 1236 vehicles in Chennai!

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சந்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "ஒவ்வொரு மண்டலத்திலும் காய்கறி விற்பவர்களுக்குத் தனியாக மாநகராட்சி சார்பில் மொபைல் எண் தரப்பட்டுள்ளது. மேலும் 7ஆயிரம் வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் விற்பதற்கு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது" எனக் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.