ETV Bharat / state

காய்கறி, பழங்களை பதப்படுத்த 'உணவு சங்கிலி மேலாண்மை' திட்டம் - vegatables process

சென்னை: காய்கறி, பழங்களை பதப்படுத்தவும், விநியோகம் செய்யவும் "உணவு சங்கிலி மேலாண்மை" திட்டம் அமல்படுத்தியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
author img

By

Published : May 28, 2020, 4:16 PM IST

ஊரடங்கு காரணமாக விவசாயிகளிடம் இருந்து விளை பொருள்களை நேரடியாக கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், அனிதா சுமந்த ஆகியோரின் அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கு, மாநில அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "ஊரடங்கு அறிவித்ததும், தோட்டக்கலை துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விவசாயிகளிடம் இருந்து, காய்கறி, பழங்கள் அதிகளவில் கொள்முதல் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை, 10 ஆயிரத்து 100 வாகனங்கள் மூலம் 6 ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது எனவும், உழவர் சந்தைகள் மூலம் ஆயிரத்து 400 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கோயம்பேடு சந்தை மூடப்பட்டதை தொடர்ந்து கோவை, காஞ்சிபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினமும் 500 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் கொள்முதல் செய்து, சென்னை நகர மக்களுக்கு விற்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்கறிகளை பாதுகாக்க, குளிர்பதன கிடங்குகளுக்கான வாடகை மே 31 வரை விலக்களிக்கப்பட்டுள்ளது. காய்கறி, பழங்களை பதப்படுத்தவும், விநியோகம் செய்யவும், 482 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் "உணவு சங்கிலி மேலாண்மை" திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ஊரடங்கு காலத்தில் மட்டும் 37 ஆயிரத்து 635 விவசாயிகளிடமிருந்து, 2 லட்சத்து 75 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு 522 கோடியே 64 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: 'ஏழாம் அறிவு' தொடர்ந்து 'காப்பான்'- சூர்யாவிடம் உதவி கேட்கும் 90ஸ் கிட்ஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.