ETV Bharat / state

இத்தாலிக்காரர் தமிழ் அறிஞர் வீரமாமுனிவர் ஆனது எப்படி? - Veeramamunivar - Birth DAY Special

இத்தாலியில் பிறந்த கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி, எப்படி தமிழ் உரைநடையின் தந்தையானது என்பதை பற்றி பார்க்கலாம்...

Italian constanzo beschi veeramamunivar How covert as a Tamil lecture
author img

By

Published : Nov 8, 2019, 11:13 AM IST

  • நவம்பர் 8ஆம் தேதி 1680ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்த கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி கிறிஸ்தவ குருவாக, அம்மதத்தை பரப்புவதற்காக 1710ஆம் ஆண்டு கோவாவுக்கு வந்தார். பின்னர் அதே ஆண்டு அங்கிருந்து தமிழ்நாடு வந்து சேர்ந்தார்.
  • தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப தமிழ்மொழி அவசியம் என்பதை உணர்ந்த பெஸ்கி, அதற்காகத் தமிழும் கற்றார். தமிழ் அவரைத் தன்னுள் இழுத்துக்கொள்ள, சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்று இலக்கியத்தில் பேருரை நடத்தும் அளவுக்கு ஊறிப்போனார் தமிழில்.
  • இதனையடுத்து கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தனது இயற்பெயரை தமிழில் மாற்ற வேண்டும் என நினைத்து ’தைரியநாதன்’ என்று மாற்றியும் கொண்டார். பிறகு ’தைரியநாதன்’ என்பது சமஸ்கிருத பெயர் என்று அறிந்து, ‘வீரமாமுனிவர்’ என மாற்றிக் கொண்டார்.
  • இலக்கணம், இலக்கியம், அகராதி என பலவற்றை தமிழ் மொழியில் எழுதிக் குவித்தார். திருக்குறளை லத்தீன் மொழியிலும் தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகியவற்றை பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
  • அதுமட்டுமின்றி வெளிநாட்டினர் தமிழ் கற்கவும், தமிழர்கள் பிறமொழிகளைக் கற்கவும் உதவியாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். ஆயிரம் தமிழ்ச் சொற்களுக்கு லத்தீனில் விளக்கம் கொடுத்தார். இதைத்தொடர்ந்து 4400 சொற்களைக் கொண்ட தமிழ் -போர்ச்சுகீசிய அகராதியையும் படைத்தார். சொற்களுக்கான பொருள்களைத் தருவதற்காக ஆக்கப்பட்ட நூல் நிகண்டுக்கு மாற்றாக, பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி ஆகிய பகுப்புகளைக் கொண்ட சதுரகராதியைத் தொகுத்தார்.
    தமிழ் அறிஞர் வீரமாமுனிவர்
    தமிழ் அறிஞர் வீரமாமுனிவர்
  • அந்தக் காலத்தில் சுவடிகளில் மெய் எழுத்துகளுக்குப் புள்ளி வைக்காமல் கோடு போடுவது வழக்கம். நெடில் எழுத்துகளைக் குறிக்க, ‘ர’ சேர்த்தனர். இதை மாற்றி ‘ஆ’, ‘ஏ’, ‘ஓ’ ஆகிய நெடில் எழுத்துகளைக் கொண்டுவந்தார். பல்வேறு தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்தன. மக்கள் சிரமமின்றிப் படிக்க வேண்டும் என்ற நோக்கில் அவற்றை உரைநடையாக்கினார்.
  • தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார். கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதன்முதலாகப் பேச்சுத் தமிழை விவரித்தார்.
  • உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், வாமன் கதை ஆகியவற்றைப் படைத்தார். எளிய மக்களும் புரியும் வகையில் உரைநடை தொகுத்ததால், இவர் ‘உரைநடை தந்தை’ என அழைக்கப்பட்டார்.
  • தமிழின் முதல் நகைச்சுவை இலக்கியம் என்று போற்றப்படும் ‘பரமார்த்த குருவின் கதை’ நூலைப் படைத்ததும் இவரே.
    உரைநடையின் தந்தை வீரமாமுனிவர்
    உரைநடையின் தந்தை வீரமாமுனிவர்
  • இயேசு காவியமான தேம்பாவணியை இயற்றியுள்ளார். இவரைப்போல வேறு எந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை என பல இலக்கிய வகைகளிலும் நூல்கள் படைத்ததில்லை.
  • தமிழில் 23 நூல்களை எழுதிய வீரமாமுனிவர் தமிழ் மட்டுமின்றி ஒன்பது மொழிகளில் புலமைப் பெற்றவர். பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழ்ந்த இவர் தனது 67ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

இதையும் படிக்க...பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்!

Intro:Body:

தமிழ் வளர்த்த 

திரு, வீரமாமுனிவர்

அவர்கள் பிறந்த தினம் இன்று 8/11/1680 

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த வரலாறு நமக்கு உண்டு.

 எண்ணற்ற அறிஞர்கள் பல தோன்றிய நிலம், நம் தமிழ் நிலம்.

 ஆனால், பிற மொழி பேசும் 

பிற கலாச்சாரங்களைப் பின்பற்றும் பலரும்

 கடல் தாண்டி வந்து நம் தாய்மொழியைக் கற்று, 

அதைப் போற்றி வளர்த்து, தமிழ் வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றியப் பணி அளப்பரியது. 

அந்த வகையில் இத்தாலி நாட்டில் பிறந்த சேசு சபை துறவியான  கிறிஸ்தவ மதம் பரப்ப 1710ஆம் ஆண்டு இந்தியா வந்து தமிழ்மொழி கற்று தமிழ் பரப்பியிருக்கிறார். 

தன் பெயரில் இருந்து உடை, சிந்தனை, நடவடிக்கை எல்லாவற்றிலும் தமிழனாக வாழ்ந்து இறுதி வரை தமிழ் இலக்கியங்கள் படைத்து தமிழனாகவே மரித்தும் போயிருக்கிறார்.

தைரியநாதசாமி என்று தம் பெயரை மாற்றிக் கொண்டு பின்னர் அது வடமொழி சொல் என்றறிந்து பின்  வீரமாமுனிவர் என்று தன் பெயரை தமிழில்  மாற்றிக்கொண்டவர் 

 உலகின் ஏதோ ஒரு மூலையில் பிறந்து இங்கு வந்து தமிழ் கற்று அவர் ஆற்றியிருக்கும் தமிழ்ப் பணிகளை பார்க்கும்போது பெரும் வியப்பே மேலெழுகிறது.

தமிழில் செய்யுள்கள் மட்டுமே வழங்கிவந்த காலத்தில் உரைநடை காப்பியமாக இவர் பல நூல்களை இயற்றியுள்ளார். 

வேத விளக்கம்,

 வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்திருக்கிறார் .

 தமிழ் இலக்கணத்தை விளக்கும் தொன்னூல் விளக்கத்தை எழுதியிருக்கிறார் 

அதில் கொடுந்தமிழ் எனப்படும் பகுப்பளித்து பேச்சுத் தமிழை விவரிக்க முதல் முயற்சியை எடுத்தார் இவர் 

 அவர் . தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களையும் ஐரோப்பிய மொழியில் வெளியிட்டுருக்கிறார், 

 எண்ணற்ற தமிழ்ச் சுவடிகளை தேடி அலைந்ததால் ‘சுவடி தேடிய

சாமியார்’ எனவும் இ வர் பெயர் பெற்றார்.

தன்னைப் போலவே பிற நாட்டு மக்களும் தமிழ் கற்க ஏதுவாக தமிழ் லத்தீன் அகராதியை உருவாக்கினார் அதில் சுமார் 1000 தமிழ் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

 பின்பு 4400  சொற்களைக்கொண்ட தமிழ் போர்த்திகீய அகராதியை உருவாக்கினார், 

இவர் சுமார் 23 நூல்களை எழுதியிருக்கிறார்

 தமிழ் எழுத்துக்களை எழுதும் முறையிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறார், 

இவரைப் பற்றி இன்னும் பல நூறு தகவல்களை கொடுத்துக் கொண்டிருக்கலாம்,

ஆனால் நாம் உணர வேண்டியது 

தமிழ் என நாம் வாயளவில் பேசிக் கொண்டிருக்கிறோம், 

 ஆனால் பல செயல் வடிவங்களை செய்து காட்டியவர்கள் பலர் உண்டு 

இது போன்ற தமிழ் வளர்த்தவர்களை  அவரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்வது அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுக்கு அவருக்கு நாம் கொடுக்கும் மரியாதையாக இருக்கும் , 

*************************

 *மகத்தான தமிழ் அறிஞர் வீரமாமுனிவரின் பிறந்த நாள் இன்று.*  அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து... 

நன்றி தமிழ் இந்து நாளிதழ்.

 இத்தாலியில் பிறந்த வர். கிறிஸ்தவ குருவான இவர் மதப் பிரச்சாரத்துக்காக 1710-ம் ஆண்டு கோவாவுக்கு வந்தார். அங்கிருந்து தமிழகம் வந்து சேர்ந்தார்.

 மதத்தைப் பரப்ப உள்ளூர் மொழியைத் தெரிந்துகொள்வது அவசியம் என்பதை உணர்ந்தார். அதற்காகத் தமிழ் கற்றார். தமிழ் அவரைத் தன்னுள் இழுத்துக்கொண்டது. சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். விரைவிலேயே இலக்கியப் பேருரை கள் நடத்தும் அளவுக்குப் புலமை பெற்றார்.

 கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தனது இயற்பெயரை முதலில் தைரியநாதன் என்றுதான் மாற்றிக் கொண்டார். பிறகு அதுவும் சமஸ்கிருதம் என்று அறிந்து வீரமாமுனிவர் என்று வைத்துக்கொண்டார் இந்த முன்னுதாரணப் புலவர்.

 இலக்கணம், இலக்கியம், அகராதி ஆகியவற்றைப் படைத்தார். திருக்குறளை லத்தீன் மொழியிலும் தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகிய வற்றை பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட்டார்.

 வெளிநாட்டினர் தமிழ் கற்கவும், தமிழர்கள் பிறமொழி களைக் கற்கவும் உதவியாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். ஆயிரம் தமிழ்ச் சொற்களுக்கு லத்தீனில் விளக்கம் கொடுத்தார். தொடர்ந்து 4400 சொற்களைக் கொண்ட தமிழ் -போர்ச்சுகீசிய அகராதியைப் படைத்தார். நிகண்டுக்கு மாற்றாக பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி ஆகிய பகுப்புகளைக் கொண்ட சதுரகராதியைத் தொகுத்தார்.

 அந்த காலத்தில் சுவடிகளில் மெய் எழுத்துகளுக்குப் புள்ளி வைக்காமல் கோடு போடுவது வழக்கம். நெடில் எழுத்துகளைக் குறிக்க, ‘ர’ சேர்த்தனர். இதை மாற்றி ‘ஆ’, ‘ஏ’, ‘ஓ’ ஆகிய நெடில் எழுத்துகளைக் கொண்டுவந்தார். பல்வேறு தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்தன. மக்கள் சிரமமின்றிப் படிக்கவேண்டும் என்ற நோக்கில் அவற்றை உரைநடையாக்கினார்.

 தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார். கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதன்முதலாகப் பேச்சுத் தமிழை விவரித்தார்.

 உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், வாமன் கதை ஆகியவற்றைப் படைத்தார். தமிழின் முதல் நகைச்சுவை இலக்கியம் என்று போற்றப்படும் ‘பரமார்த்த குருவின் கதை’ நூலைப் படைத்ததும் இவரே.

இயேசு காவியமான தேம்பாவணியை இயற்றினார். இவரைப்போல வேறு எந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை என பல இலக்கிய வகைகளிலும் நூல்கள் படைத்ததில்லை.

 தமிழில் 23 நூல்களை எழுதியுள்ளார். ஒன்பது மொழிகளில் புலமை பெற்றவர். பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழ்ந்தவர், தனது 67-வது வயதில் மறைந்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.