சென்னை : நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் இன்று காலை சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சிகிச்சை காரணமாக அவர் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் பகலவன் கூறுகையில், "விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. அதனால் சென்னை, வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், தற்போது சிகிச்சைக்காக, அனுமதிக்கபட்டு உள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு காய்ச்சல் தான் ஏற்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளனர். இதனால் அவர் தொடர்ந்து இரண்டு நாட்கள் சிக்கிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இதனால் காய்ச்சல் ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். கட்சி நிர்வாகிகள் யாரும் வரும் 30 ஆம் தேதி வரை அவரை சந்திக்க வர வேண்டாம் என்று கட்சியின் சார்பில் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : ED Raid : தமிழ்நாட்டில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை! ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் வீட்டில் சோதனை எனத் தகவல்!