ETV Bharat / state

'இது முறையல்ல..!'- கிருஷ்ணசாமி மீது திருமா வருத்தம்! - krishnasamy

சென்னை: கிருஷ்ணசாமி அரசியல் தலைவராக இருந்துகொண்டு பொதுவெளியில் சாதி குறித்து பேசுவது வருத்தமளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்
author img

By

Published : May 28, 2019, 11:43 PM IST

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி, கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகை மேற்கொண்டு உணவு உண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "சாதிக்கு எதிராக பக்குவப்பட்ட தமிழ் மண்ணில் அரசியல் தலைவராக இருக்கும் கிருஷ்ணசாமி, பொதுவெளியில் சாதி குறித்து பேசுவது வருத்தமளிக்கிறது. மத்தியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாததால் எதிர்க்கட்சியாக இருந்துக் கொண்டு மக்கள் நலனுக்காக குரல் கொடுக்க வேண்டிய பெரும் பணி திமுக தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காத்திருக்கிறது" தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் அக்கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் இசுலாமியர்கள் கலந்துகொண்டு தொழுகை மேற்கொண்டு உணவு உண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, "வடஇந்தியாவில் பாரதிய ஜனதா அதன் கூட்ணி கட்சிகள் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொண்டாடுகின்றனர். ஆனால் தமிழகத்தில் பா.ஜ.க. அ.தி.மு.க. கூட்டணி நூற்றுக்கு நூறு தோல்வியை சந்தியுள்ளது. வாக்கு வங்கியில் பேரம் பேசும் அநாகரீக முறைக்கு தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

சிதம்பரத்தில் மிகச்சொற்ப வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றிருந்தாலும் போராடி போராடி பெற்ற வெற்றி என்பதால் எனக்கு இது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

விடுதலைச் சிறுத்தைகள் தாந்தோன்றி தனமாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு விமர்சித்து வருவதை நிறுத்த வேண்டும். அது நம்மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும். இவ்வாறு விமர்சிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

விரைவில் தொகுதிக்கு வந்து மக்களை நேரில் சந்தித்து நன்றி கூறவுள்ளேன்.

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறாததால் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதற்கு பயனில்லை என்று சிலர் கூறுகின்றனர். அது அவர்களின் அரசியல் அறியாமை என்று நான் கருதுகிறேன்.

எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஆட்சியை முறையாக நடத்த கேள்வி எழுப்புவதே சிறந்தது. அந்த வகையில் தி.மு.க. தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய பணி காத்துக்கொண்டு இருக்கிறது.

சாதியை ஒழிப்பதற்காக அன்னல் அம்பேத்கர், பெரியார் போன்ற மாமனிதர்கள் போராடியுள்ளனர். பக்குவப்பட்ட தமிழ் மண்ணில் அரசியல் தலைவராக இருந்துகொண்டு நான் உட்பட சாதி என்ன என்று கேட்பது முறையானதல்ல. அரசியல் கட்சி தலைவரான கிருஷ்ணசாமி அவ்வாறு கேட்டது வருத்தமளிக்கறது. அவர் பேசியதற்கு எனது அதிர்ச்சியை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழகத்துக்கு உரிய நீர் வழங்கிட காவிரி மேலாண்மை வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக அரசு தண்ணீரை திறக்க மறுத்தால் தமிழக அரசு தலையிட்டு நீரை பெற்றுத்தர வேண்டும்.

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மோடி கூறியிருக்கிறார். ஆனால் மத்திய பிரதேசத்தில் ஜெய் ராம் என்று சொல்ல சொல்லி இசுலாமிய தம்பதியினரை கட்டி வைத்து அடித்துள்ளார்கள். அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த போக்கு நீடிக்குமோ என்ற அச்சம் தான் நீடிக்கிறது. இவ்வாறு தான் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஐந்து ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தார். அவர் கூறியவாறு சிறுப்பான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆட்சியை அவர் அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.