'உயிரி பன்மம் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலத்தன்மை' குறித்த கருத்தாய்வுக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.
இந்த கருத்தாய்வு கூட்டமானது மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் (முன்னாள் மாநிலத் திட்டக் குழு) துணைத் தலைவர் சி.பொன்னையன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், "பூமி தோன்றி 46 லட்சம் ஆண்டுகள் கடந்த நிலையில் மனிதன் தோன்றி தொழில் துறையில் முன்னேறிய நிலையில் இன்று 50% உலகில் உள்ள அனைத்து காடுகளும் அழிக்கப்பட்டுள்ளது. உலகின் 40% பொருளாதாரம், உயிரியல் செயல்முறைகள் மற்றும் தயாரிப்புக்களைச் சார்ந்துள்ளது.
பல்லுயிரிலிருந்து பெறப்படும் மருந்துகளின் தோராய மதிப்பு ரூ.4 ஆயிரத்து 340 கோடியாகும். நம்மைச் சுற்றியுள்ள செடி கொடிகள் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் அனைத்திற்கும் நம்மால் விலை நிர்ணயம் செய்ய இயலாது.
இதில் சராசரியாக ஓர் இந்தியன் 69 ஆண்டுகள் வாழ்வதாகக் கணக்கில் கொண்டால் அவன் சுற்றுச்சூழலிலிருந்து பெறும் பிராணவாயுவின் மதிப்பு சுமார் ரூ.72.5 கோடியாகும். ஓர் மனிதன் வனத்திற்குள் சென்றால் அவனுக்கு மன அமைதி, உற்சாகம், புதிய சிந்தனை, இயற்கை பற்றிய படிப்பறிவு, நம் நாட்டின் ஆன்மீக மதிப்பையும் உணர்கிறான்.
வனங்கள் மழை மேகங்கள் உருவாகவும், மண் அரிப்பை தடுக்கவும், கரியமில வாயுவை உள்வாங்கி சுற்றுச்சூழல் நிலையைச் சமமாக வைக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், இயற்கையில் ஊட்டச்சத்து சுழற்சிக்கும், உயிரினங்களுக்கு உறைவிடமாக அமைகின்றது. ஆனால், இவை அனைத்திற்கும் பணத்தால் மதிப்பு கூற முடியாது.
மத்திய சுற்றுச்சூழல் துறை மூலம் The Economics of Ecosystems and Biodiversity India Initiative, 70 சுற்றுச்சூழல் பொருளாதார நிபுணர்களைக் கொண்டு ஒரு ஹெக்டேர் வனங்கள் மூலம் கிடைக்கும் சேவைகளின் மதிப்பு ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்து 695 என்று நிர்ணயித்துள்ளது.
தமிழ்நாட்டில் வனப் பரப்பளவு 22 லட்சத்து 87 ஆயிரத்து 700 ஹெக்டேர் உள்ள நிலையில் வனங்கள் மூலம் கிடைக்கும் 17 வகையான பயன்களுக்கு மட்டுமே போடப்படும் மதிப்பு ரூ.57 ஆயிரத்து 809 கோடிகள். இன்னும் மதிப்பிட முடியாத பயன்கள் இன்னும் பல கோடிகள்.
உயிரி பன்மம் சட்டம் 2002 (Biological Diversity Act, 2002) இயற்றப்பட்டதின் நோக்கம் மக்கள் மூலம் பல்லுயிர் பாதுகாப்பு, மக்கள் உயிரி பன்ம பதிவேடு தயாரித்தல் மற்றும் இயற்கை வளங்களின் மூலம் கிடைக்கும் நன்மைகளை (பண மதிப்பீடாக) பகிர்ந்துகொள்ளுதல். (Access Benefit Sharing) தமிழ்நாட்டில் மொத்தம் 13,604 உயிர் பன்ம லோண்மை குழுக்கள் உறுவாக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு குழுவிற்கும் ஒன்று என்ற கணக்கும் 13 ஆயிரத்து 604 மக்கள் உயிரி பன்ம பதிவேடுகள் நவம்பர் 2019 முதல் ஜனவரி 2020க்குள் தமிழ்நாடு மாநில உயிரி பன்ம வாரியம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்பதிவேட்டில் அந்தந்த குழுக்களின் எல்லைக்குட்பட்ட இடத்தில் அமைந்திருக்கும் பல்லுயிர்கள் குறித்தும் அம்மக்களிடையே பல்லுயிர் குறித்த பாரம்பரிய அறிவு சார் குறிப்புக்களும் இடம்பெற்றுள்ளன.
இது குறித்து தேசிய உயிரி பன்ம ஆணையம் பாராட்டி மற்ற மாநிலங்களும் தமிழ்நாட்டின் மக்கள் உயிரி பன்ம பதிவேடு உருவாக்க பயன்படுத்திய உக்தியை மாதிரியாகப் கொண்டு உருவாக்க அறிவுரை வழங்கியுள்ளது.
1, 273 வகை தாவரங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படுகிறது. மீன்பிடித்தலில் தமிழ்நாடு, இந்தியா பட்டியலில் முதல் இடத்தில் வைக்கிறது" உள்ளிட்ட விவரங்கள் விவாதிக்கப்பட்டது.
இக்கருத்தரங்கில் மீனவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள், அவைகளைக் களயக்கூடிய வழிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட வனப் பாதுகாவலர்கள், துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டின் வன பயன்பாடுகளின் மதிப்பு அளவிட முடியாதவை - மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு
சென்னை: தமிழ்நாட்டின் மக்கள் உயிரி பன்ம பதிவேடு உருவாக்க பயன்படுத்திய உக்தியை மாதிரியாகப் கொண்டு உருவாக்க தேசிய உயிரி பன்ம ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.