சென்னை: தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் அரியலூர் மற்றும் ஆலங்குளம் சிமெண்ட் ஆலைகளில் "சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்ட் (OPC)" மற்றும் "பொசலோனா போர்ட்லேண்ட் சிமெண்ட் (OPC)"ஆகிய இரண்டு வகையான சிமெண்டுகளை உற்பத்தி செய்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 16.11.2021 அன்று “வலிமை சிமெண்ட்” என்ற புதிய வகை சிமெண்ட்டை அறிமுகப்படுத்தினார். இந்த சிமெண்ட் மிகவும் தரமாக உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் பிரபலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த சிமெண்டை பற்றிய தகவல் அறிய தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் சிறப்பான முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்த புதிய வகை “வலிமை சிமெண்ட்” தொடங்கிய நாள் முதல் இன்று வரை 2,26,828 மெட்ரிக் டன் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த “வலிமை சிமெண்ட்” பெறுவதற்கான வழிமுறைகளைப் பற்றி அறியவும், இதன் தரம் பற்றி அறிந்து கொள்ளவும், இந்த சிமெண்ட்டை விற்பனை செய்வதற்கான சிமெண்ட் விற்பனை முகவராக நியமனம் பெறுவது போன்ற விவரங்களை அறிய தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணைத்தந்துள்ளது. அந்த எண் 1800 599 7635 ஆகும். இந்த தொலைபேசி எண்ணைத் தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
இந்த கட்டணம் இல்லா தொலைபேசி இணைப்பின் மூலம் “வலிமை சிமெண்ட்” கிடைக்கும் இடங்கள், அதன் தரம் மற்றும் உறுதி மற்றும் விற்பனை முகவர்கள் பற்றிய அனைத்து விவரங்களும் கிடைக்கும். இந்த கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணைப் பொதுமக்கள் தொடர்பு கொண்டு “வலிமை சிமெண்ட” பற்றிய விவரங்களைக் கேட்டுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சென்னையின் 2ஆவது பன்னாட்டு விமான நிலையம் பரந்தூரில் அமைகிறது - மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்