ETV Bharat / state

இந்தியக் கடலோரக் காவல் படையில் இணைந்த வஜ்ரா கப்பல்!

author img

By

Published : Mar 24, 2021, 8:46 PM IST

சென்னை: எல் அண்ட் டி நிறுவனம் உருவாக்கிய வஜ்ரா கப்பல், இந்தியக் கடலோரக் காவல் படையில் இணைக்கும் நிகழ்வு இன்று (மார்ச் 24) நடைபெற்றது.

vajra
வஜ்ரா கப்பல்

சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி பகுதியில் எல் அண்ட் டி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வஜ்ரா கப்பலை இந்தியக் கடலோரக் காவல் படையில் இணைக்கும் நிகழ்வு சென்னையில் இன்று (மார்ச் 24) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், வஜ்ரா கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்வில் இந்தியக் கடற்படை பொது-இயக்குநர் கிருஷ்ணசாமி நடராஜன் உள்ளிட்ட பல்வேறு கடற்படை, அரசுத் துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

vajra
முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், வஜ்ரா கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிப்பு

இதில், உலகத் தரமான திசைக்காட்டுக் கருவிகள், தொலைத்தொடர்புச் சாதனங்கள், கருவிகள், உணர்விகள் (சென்சார்) உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 30 மிமி, 12.7 மிமி துப்பாக்கிகள் பொருத்தப்பட்டு போருக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஒரு ஹெலிகாப்டர், 4 அதிவிரைவுப் படகுகளைத் தாங்கிச் செல்லும் வகையிலும் வடிவமைத்துள்ளனர். மேலும், கடலில் கொட்டிய எண்ணெய் கழிவுகளைச் சீரமைக்கும் கருவியும் இந்தக் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளது.

vajra ship
இந்தியக் கடலோரக் காவல் படையில் இணைந்த வஜ்ரா கப்பல்

ஐ.என்.எஸ். வஜ்ரா கப்பல் தூத்துக்குடி பகுதியில் பணியில் ஈடுபடவுள்ளது. இதற்குத் துணை ஆய்வாளர் ஜெனரல் அலெக்ஸ் தாமஸ் தலைமை தாங்கவுள்ளார். இந்தக் கப்பல் பிரதானமாகக் கடலோர ரோந்துப் பணிகளுக்கும், இந்தியாவின் கடல்சார் குறிக்கோள்களை நிலைநாட்டவும் பயன்படுத்தப்படும் என இந்தியக் கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ராணுவ வீரரைத் தாக்கிய பி.எஸ்.எஃப். ஒட்டகம் சுட்டுக்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.